பக்கம்:சிற்றம்பலம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

திருக்கோயில்களின் கட்டிட அமைப்பு விரிந்தது; குகைக் கோயில் - களும், கற்கோயில்களும் வந்தன.

மூவர் தோன்றித் தேவாரம் பாடியபிறகு தமிழ் மக்களுக்குக் கடவுள் உணர்ச்சி மிகுதியாயிற்று. தலவழிபாட்டில் ஊக்கம் வளர்ந்தது. தேவாரப் பதிகங்களைப் பக்தியோடு ஒதத் தொடங் கினர். திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி வகுப்பதற்கு முன்பே திருப்பதிகங்களேத் தலந்தோறும் ஒதும் வழக்கம் உண் டாயிற்று. பழைய காலத்துச் சிலா சாசனங்களில் வரும் குறிப்புக்களால் இந்தச் செய்கியை அறியலாம். இராச ாாசசோழன் தேவாரங்களைக் கண்டெடுத்து நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு கிருமுறைகளாக வகுத்த பிறகு, தல வழி பாடும் தேவாரம் ஒதுவதும் பின்னும் பெருகின. அப்பால் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணம் பாடி நாயன்மார்களின் பெருமையைத் தமிழுலகம் கன்கு அறியச் செய்தார். அது முதல் நாயன்மார்களிடம் தமிழ் மக்களுக்கு அன்பு அதிகமாயிற்று. அவர்களிலும் சிறப்பாக மூவருடைய வரலாறுகளே உணர்ந்தும் அவர்களுடைய திருப்பதி கங்களை ஒகியும் இன்புற்றனர். பொதுவாக எல்லாத் தலங்களையும் மக்கள் வழிபட்டு வந்தாலும் தேவாரம் பெற்ற தலங்களுக்குத் தனி மதிப்பு மிகுதியாக ஏற்பட்டது.

ஆலயங்களில் வழிபாட்டு வகைகள் விரிந்தன. சோழ அரசர் களுக்குப் பின்பு வந்த மன்னர்களும் ஆலயங்களை விரிவாக அமைத் தனர். அதன் பின்பு சென்ற நூற்றண்டில் கனவணிக மக்கள் தேவாரம் பெற்ற தலங்களிலுள்ள சிவாலயங்களே மிகச் சிறந்த வகையில் கட்டினர்.

1. முதல் இராஜராஜ சோழனே திருமுறை கண்டவனென்று பெரும் பாலும் கூறப்படுபவளுயினும், அதற்கும் முற்பட்ட சோழ ராட்சிகளில் பழைய தலங்களில் எல்லாம் திருப்பதியம் ஒதும் வழக்கு இருந்ததென்பது சாசனங்களால் நன்கறியப்படுகின்றது, 9-ஆம் நாம்ருண்டினனை மூன்ரும் கந்தி வர்மன் காலத்தே திருவல்லத்தும், 10-ஆம் நாற்ருண்டினனை முதல் இராஜகேசரி அவன் மகன் முதற் பாராந்தகன் காலங்களில் பழுவூர் அள்ளுர் களிலும், 11-ஆம் நாற்ருண்டினரான இரண்டாம் பரகேசரி, உத்தமசோழன் காலங்களில் முறையே திருவாவடுதுறை, அந்துவ கல்லூர்த் திருவாலங்துறை களிலும் திருப்பதியங்கள் ஒதப்பட்டுவந்த செய்தியை அவை கூறுதல் காணலாம், இதல்ை தேவாரம் பாடிய மூவரின் வரலாறுகளும் பதிகங்களும் காட்டிம் சிறுக அறியப்பட்டிருந்தவற்றை அவ் இராஜராஜ சோழன் பிரபல மடையச் செய்தவன் என்பது தகுமேயன்றி அச்சோழனுக்கு முன்பு அவை, முழுதும் வழக்கற்றிருந்தன எனல் பொருந்தாதென்பது பெறப்படும்.' (மு. இராகவையங்கார் எழுதிய ஆராய்ச்சித் தொகுதி, ப, 287, 288.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/8&oldid=563151" இலிருந்து மீள்விக்கப்பட்டது