பக்கம்:சிற்றம்பலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதிக்க வேண்டாம்

விலங்கினங்களைக் காட்டிலும் மனிதன் சிறந்தவன் என்று கூறுவதற்குக் காரணம் மனிதன், தக்க இன்ன தகாதன இன்ன என்று, ஒக்க உன்னும் " பகுத்தறிவை உடையவனாக இருப்பதுதான். அறிவின் சிறப்பினால் மனிதன் விலங்கினங்களையும் அடக்கியாளுகிருன். ஐம் பெரும் பூதங்களையும் வசப்படுத்திப் பல இயந்திரங்களே இயக்குகிருன். உடம்பினும் செய்யும் வேலைகளைக் காட்டி னும் அறிவில்ை அமையும் வேலைகள் மிகச் சிறந்த பயனை அளிக்கின்றன.

தான் உலக வாழ்க்கையில் பெறும் அநுபவத்தால் அவன் அறிவு பெறுகிருன். முன்னேர்கள் தம்முடைய அநுபவத்தை நூலாக எழுதி வைத்திருத்தலின் அந் நூல் களேப் படித்தும் அறிவு பெறுகிருன். பிறர் தம் அநுபவத் தாலும் கல்வியிலுைம் உணர்ந்தவற்றைக் கூறக் கேட்டும் அறிவு பெறுகிருன். கல்வி, கேள்வி, அநுபவம் என்னும் மூன்றிலுைம் மனிதனுடைய அறிவு வளம் பெறுகிறது. அந்த அறிவைக் கொண்டு அவன் பல அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொள்கிருன்.

பலருக்கு விளங்காமல் மயக்கமாக இருக்கும் உண்மை களே அறிவாளி தன் அறிவினல் தெளிகிருன் , பிறருக்கும் தெளிவுறச் சொல்கிருன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தது, வானொலிக் கருவியைக் கண்டுபிடித்தது, தாமே இயங்கும் ஊர்திகளைக் கண்டுபிடித்தது முதலிய விஞ்ஞான வெற்றி கள் யாவும் மனிதனுடைய அறிவாற்றலின் அற்புத விளைவுக்கு உரிய உதாரணங்கள்.

கம்பராமாயணம், வாலிவதைப் படலம், 112.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/80&oldid=563223" இலிருந்து மீள்விக்கப்பட்டது