பக்கம்:சிற்றம்பலம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதிக்க வேண்டாம் 73

இறைவனிடம் அன்பு கொள்ள வேண்டும் என்ப தற்கு ஏதுவும் எடுத்துக்காட்டும் பயன்படும். அதற்கு மேலும் அறிவை நம்பி வாழ்கிறவன் கரையில் இறங்கிய பிறகும் தோணியை கிலத்திலே செலுத்த முயலுபவனைப் போன்றவனே ஆவான். எனவே, இறைவன்பால் அன்பு செய்வார் அளவுக்கு மேல் சோதனே செய்ய வேண்டுவ தில்லை. மிக்குச் சோதித்தலால் பயன் இல்லை.

இதைத் திருஞானசம்பந்தர் சொல்கிரு.ர்.

ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

சோதிக்க வேண்டா.

(ஏதுக்களினலும் அவற்றுக் கேற்ப எடுத்துக்காட்டும் திருஷ்டாந்தங்களாலும் அளவுக்கு மிஞ்சிச் சோதனே செய்ய வேண்டாம். -

ஏது. இதனுல் இது ஆயிற்றென்று சொல்லுதல். 'குடம் இருத்தலால் குயவன் இருப்பான் என்பதில் குடம் இருத்தல் ஏது. எடுத்துக்காட்டு, கிருஷ்டாந்தம் இரண்டும் ஒரே பொரு ஞடையன. மிக்கு - அளவுக்கு மிஞ்சி)

சோதிக்க வேண்டாம் என்ருல் இறைவன் இருக் கிருன் என்ற எண்ணம் மனத்தில் உண்டாக வேண்டாமா?

அந்த எண்ணம் உண்டாவதற்கு மிகமிக நுட்பமாக ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லையே! நாம் தினந்தோறும் காணும் பொருள்களேக் கொண்டே இறைவன் உண் மையை உணர்ந்து கொள்ளலாமே! கண் இருந்தும் இருளிலே அது காண மாட்டாது; கதிரவனே, சந்திரனே, அக்கினியோ இருந்தால் காணும் ஆற்றலைப் பெறும் அந்தக் கதிரவனிடத்தும் திங்களிடத்தும் தீயினிடத்தும் சுடர் விடுகின்றவன் யார்? முச்சுடர்களும் ஒளி பெறுவதற்கு மூலகாரணமான சோதி இறைவன். விளக்கு எரியும் போது அதை ஏற்றி வைத்தவர் ஒருவர் உண்டு என்று ஏதுவில்ை உணர்கிருேம். அப்படியே முச்சுடர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/83&oldid=563226" இலிருந்து மீள்விக்கப்பட்டது