பக்கம்:சிற்றம்பலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதிக்க வேண்டாம் 75,

அடுத்த அடிக்கு, "அக்கினிக்குரிய புறத்தொளியாக வும் அன்பிலே ஊன்றும்போது அன்பர்களுக்கு அகவிரு. ளைப் போக்க உள்ளே எழுஞ் சோதியாயும் கின்ருன் இறைவன். இதனே ஒட்டி உணர்வாருக்கு இது அறிவதற். குரிய பொருளாகும்” என்று உரை கூறுவர், சேக்கிழார்.

'தோன்று காட்சி சுடர்விட் டுளன் என்பது ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய் அன்பில் ஊன்ற உள்எழுஞ் சோதியாய் நின்றனன்

ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றதாம்.'

இறைவனுடைய இயல்பு முழுவதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது நம் நோக்கம் அன்று. நம்மால் முற்றும் உணர்ந்துகொள்ள முடிகிறதென்றே வைத்துக்கொள்வோம். அதனல் நமக்கு என்ன பயன்? இங்கே, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய கதை ஒன்று கினேவுக்கு வருகிறது. -

ஒரு பழத் தோட்டத்திற்குள் இரண்டு பேர் நுழைங் தார்கள். ஒரு வன் அங்குள்ள மரங்களே எல்லாம் கண்டு, எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கின்றன, எத்தனை பழங்கள் பழுத்திருக்கின்றன் என்று ஆராய்ச்சி செய்யத் தலைப் பட்டான். மற்றவனே கேரே தோட்டக்காரனிடம் சென்று அவைேடு நயமாகப் பேசி அவன் தந்த பழங்களே வாங்கி உண்டான். இந்த இரண்டு பேர்களிலும் பழத்தைப் பெற்று உண்டவனே சிறந்தவன். அப்படியே இறைவனைப்

  • பெரிய புராணம், கிருஞான. 835. தோன்றுகின்ற காட்சி யாக, சுடர் விட்டுளன் என்று தொடங்கிய அடி, அமைந்த அக்கினியின் புறத்து ஒளியாய் அன்பிலே ஊன்றி கிற்த உள்ளே எழும் அகச் சோதியாய் இறைவன் நின்றன்; விரும்பிக் காண் பாருக்கு இது உணரும் பொருள் என்று சொன்னபடியாகும் என்பது இதன் உரை. - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/85&oldid=563228" இலிருந்து மீள்விக்கப்பட்டது