பக்கம்:சிற்றம்பலம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிய சாத்திரங்களைப் படித்து ஆராய்ச்சி செய்து பொழுது போக்குபவர்களேவிட அவனிடம் பக்தி செய்து அவன் அருளைப் பெறுபவனே சிறந்தவன்.

பழத் தோட்டம் இது என்ற அளவுக்கு ஆராய்ச்சி இருந்தால் போதும். அதற்குமேல் ஆராய வேண்டிய அவசியம் கமக்கு இல்லை. பழத்தை நுகர முயல்வதுதான் நாம் செய்வதற்குரியது.

இறைவனுடைய அருளேப் பெறுவதல்ை மைக்கு என்ன பயன்? நாம் என்றும் கவலே உடையவர்களாக இருக்கிருேம். வாழ்நாளில் எத்தனையோ வகையான துக்கங்கள் நேர்கின்றன. பசி, பிணி, பகை ஆகிய துன்பங் கள் உண்டாகின்றன. இவற்றிற் கெல்லாம் மேலாகப் பிறப்பு இறப்பு ஆகிய இவை இருக்கின்றன. வாழ்நாளில் கவலே இல்லாமல் ஒருவர் இருப்பது அருமை. அப்படி இருப்பதாக இருந்தாலும் பிறப்பு, இறப்பு என்னும் பெரிய துக்கங்களினின்றும் நீங்கி இருக்க முடியாது. நமக்கு வரும் துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பெரியவை இவ்விரண்டும். பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாவிட்டால் வேறு துக்கங் களே இல்லை. ஆதலின் ஒவ்வொரு துன்பமாக நீக்கிக் கொண்டிருப்பதைவிடப் பிறப்பு இறப்பை நீக்குவதற்கு முயன்ருல் எல்லாத் துன்பங்களையும் போக்க முயன்ற தாகும். வளர்ந்த மரத்தின் ஆணி வேரைத் தறித்தால் மரம் முற்றும் வாடிவிடுவதைப் போலப் பிறப்பு இறப்புத் துன்பங்களின் மூலம் போளுல் எல்லாம் போய்விடும். அந்த மூலந்தான் பாசம் என்பது. அதை நீக்குவதே நம்முடைய கோக்கமாக இருக்க வேண்டும். -

பசியைப் போக்க வேண்டுமானுல் உணவை உண்ண வேண்டும். நம்முடைய மாதுக்கத்தைப் போக்குவது இறைவனது அருள். பழத்தைத் தரும் தோட்டக்காரனே நண்பனுக்கிக்கொண்டு பழத்தை நுகர்ந்தவனப் போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/86&oldid=563229" இலிருந்து மீள்விக்கப்பட்டது