பக்கம்:சிற்றம்பலம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிற்றம்பலம்

சிறிதளவும் நீங்காமல் பொருந்தி வாழ்ந்து நம்மைப் பிறப்பு இறப்புக்குள் வேறுபடுத்தித் துன்புறுத்தும் பாசத்தால் வரும் பிறப்புக்குரிய அஞ்ஞான நெறியினின்றும் நீங்குங் கள்' என்று பொருள் வகுத் திருக்கிரு.ர்.

' மாதுக்கம் நீங்க லுறுவீர்மனம் பற்றும் என்பது

ஆகிச்சுடர்ச் சோதிய்ை அன்பின் அகத்துள்ளாக்கிப் போதித்த நோக்குற் ருெழியாமற் பொருங்கிவாழ்ந்து பேதித்த பந்தப் பிறப்பின்நெறி பேர்மினென்றம்." 3. இறைவனிடம் அன்பில்லாதவர்களும், கல்ல நெறியில் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லாதவர்களும் இத் தகைய உபதேசத்தைக் கேட்டுப் பயனடையப் போவ தில்லை. அவர்கள் தமக்கு மாதுக்கம் உண்டென்பதையே மறந்தவர்கள். ஆதலின், கன்னெறி பற்றி வாழும் ஆசையுடையவர்களுக்கே இந்த உரை பயன் பெறும். அத்தகைய சாதுக்கள் உலகில் பலர் இருக்கிருர்கள். நல்ல நெறியை அடைய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள், போலி ஞானிகளேயும் உலகாயதர்களையும் அணுகி வீண் ஆராய்ச்சியில் புகுவதும் உண்டு. அந்த ஆராய்ச்சியால் தமக்கு ஏதேனும் வழி உண்டாகும் என்ற கம்பிக்கையால் அவ்வாறு செய்வார்கள். அவர்களுக்கு உண்மையை உணர்த்தி, வீண் ஆராய்ச்சியிலே புக வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுவதே சாலச் சிறந்தது. ஆராய்ச்சிக் குழுவிலே சேராமல் இறைவனேயே சாருங்கள். யார் யாரையோ சார வேண்டாம். இங்கே வாருங்கள் ;

பெரிய கிருஞா. 836. இதன் பொருள் மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம் பற்றும் என்ற வாக்கு, ஆகிச் சுடர்ச் சோதியை அன்பினுல் உள்ளத்துள் அழைத்து அவளும் போதிக் கப்பெற்ற உண்முக நோக்கைப் பெற்று, அது ஒழியாத வண்ணம் பொருந்தி வாழ்ந்து, வேறுபட்ட பாசத்தால் உண்டாகும் பிறப்பு வழியினின்று நீங்குங்கள் என்று சொன்ன தாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/88&oldid=563231" இலிருந்து மீள்விக்கப்பட்டது