பக்கம்:சிற்றம்பலம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

இவ்வாறு தல வழிபாடு சிறப்படைய அடைய அவற்றைப் பற்றிய புராணங்களும், பிரபந்தங்களும் கணக்கில்லாமல் எழுந்தன. சில தலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் பாடப் பெற்றன. புலவ்ர்கள் தல புராணங்களிலே தங்கள் புலமைத் திறத்தைக் காட்டத் தொடங்கினர். வட மொழியில் தல புராணங் களுக்கு, இலக்கியமாக வைத்து எண்ணப்பெறும் கிலே இல்லை, தமிழிலோ, பல பெரிய புலவர்கள் புராணங்களைக் காப்பியமாகவே இயற்றத் தொடங்கினர். சைவ எல்லப்ப நாவலர், சிவஞான சுவாமிகள், கச்சியப்ப முனிவர், மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை முதலிய புலவர்கள் புராணங்களைக் காப்பியச் சுவை அமையும்படி இயற்றியிருக்கிறர்கள்.

தலங்களில் மண்டப வகைகளும், பசு மடங்களும், வேத பாடசாலை, தேவார பாடசாலை, ஆகம பாடசாலைகளும், திருவிழாக்களும் விரிவாக ஏற்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வரையிலும் இந்தத் தலப் பற்று தமிழ் நாட்டில் வளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு கடவுளுணர்ச்சியும் தவ வழி பாடும் வளர்ந்து வந்ததற்கு மூலகாரணம் தேவாரத் திருப்பதிங்க ளென்றே சொல்ல வேண்டும்.

தேவாரம் ஒதும் ஒதுவார்கள் ஆலயங்களில் கிருப்பதிகங்களே ஒகி வந்தார்கள். இப்போதும் பலர் அங்கங்கே உள்ளனர். ஆயினும் தேவாரத்தின் இலக்கியச் சுவையை உணர்ந்து இன் புறும் முறை தமிழ் மக்களிடத்தில் வளரவில்லை. சிவஞான போதம் முதலிய சாத்திரங்களுக்கு உரை வகுத்த பெரியோர் அங்கங்கே பல பாடல்களே மேற்கோளாகக் காட்டினர். நச்சினர்க் கினியர் எங்கோ ஓரிரண்டு இடங்களில் சுட்டிப் போயினர். தேவாரத்துக்கு உரை காணவோ, அதன் இலக்கிய நயத்தை ஆராயவோ பலர் முற்படவில்லை. அதனுல் ஒதுவார்கள் ஒது வதைத் தவிரத் தேவாரத்துக்கு வேறு பயன் இல்லாமற் போய் விட்டது. சொற்பொழிவாளர்கள் சில பாசுரங்களை மேற் கோளாகக் காட்டிப் பேசினர். தமிழ்ப் பாட புத்தகங்களில் முன்பு தேவாரப் பதிகங்களைச் சேர்த்து வந்தனர். தமிழ் வித்துவான் தேர்வுக்குத் திருமுறைகளில் எதையாவது பாடமாக வைத்தார்கள். இப்போது இந்த வழக்கம் கின்றுவிட்டது.

இந்த நிலையில் தேவார அறிவு தமிழ் மக்களிடத்தில் வளராமல் இருப்பது வியப்பன்று. வரவரக் குறைந்துபோகு மாயின் அதுவும் வியப்பாகாது. பண்ணுேடு முறையாகத் தேவாரத்தைப் பாடுவதுகூட இப்போது அருகி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/9&oldid=563152" இலிருந்து மீள்விக்கப்பட்டது