பக்கம்:சிற்றம்பலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழையடியார் சொல்

சிறந்த பாட்டுக்காரர். அவர். கணிரென்ற தொண்டை. சாரீர சம்பத்து மிகவும் கன்ருக வாய்த்திருக்கிறது. பாட்டுப் பாடினல் சாகித்தியத்தின் உருவம் கன்ருகப் புலப்படும்படி பாடுவார். சங்கீத ஞானத்தில் அவருக்கு இணை அவரே. அற்புதமான கவிகளை அவர் தம்முடைய சாரீரத்திலே இழைத்துப் பண்னேடு ஒதும்போது கூடி யிருக்கும் மக்கள் அத்தனே பேரும் சொக்கிப் போவார்கள். இறைவனைப் பற்றிய அழகிய பாடல்களைப் பொருள் விளங்கும்படியாகப் பலாச் சுளே யை ஒடித்துத் தேனில் தோய்த்துக் கொடுப்பதுபோலப் பாடுவார்.

அவர் ஒரு கோயிலில் பாடப் போயிருந்தார். கோயில் சிறிய குன்றின்மேல் இருந்தது; முப்பது காற்பது படிகள் ஏறினல் கீழிருந்து கோயிலுக்குப் போய்விடலாம். கீழே மண்டபம் இருந்தது. அங்கேதான் பாட்டுக் கச்சேரி கடை பெற்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். இறைவன் பெருமையையும் அவனே வணங்கவேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்தும் பாடல்களைப் பாவத்தோடு பாடினர். கேட்டவர்கள் உருகிப்போளுர்கள்.

கச்சேரி முடிந்தது. "சுவாமி தரிசனம் செய்யப் போகலாம் வாருங்கள்" என்று அன்பர்கள் அழைத் தார்கள். மற்ருெரு சமயம் வருகிறேன். இப்போது மிகவும் அவசரமாகப் போகவேண்டி யிருக்கிறது' என்று சொல்லி அவர் புறப்பட்டுவிட்டார்.

அவருடைய பாட்டைக் கேட்டவர்களெல்லாம் அந்தப் பாட்டிலே ஈடுபட்டு அதல்ை இறைவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பிறகே வீடு சென்ருர்கள். அவர்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/91&oldid=563234" இலிருந்து மீள்விக்கப்பட்டது