பக்கம்:சிற்றம்பலம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழையடியார் சொல் 83

மிடற்ருேடு வெறும் சொற்களே இசையைப்போலப் பாடு கிற அந்த மனிதரிடம் கொஞ்சம் மதிப்பு உண்டாயிற்று. காணத்தைவிட்டு இறைவன்முன் கின்று பாடுகிருரேஎன்ற எண்ணமே அதற்குக் காரணம். முன்னவரிடம் பாட்டு இருந்தது; ஆல்ை பக்தி இருந்ததாகத் தெரியவில்லை. பின்னவரிடம் பாட்டு இல்லை; ஆனல் பக்தி இருக்கிற தென்றே தெரிந்தது. இந்த இருவரையும் ஒருங்கே ஒப்பிட்டார். யார் பெரியவர்?

அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். இறைவ னுடைய சங்கிதானத்தில் பாட்டு நடைபெறப் போகிறது. 'இன்று நம்முடைய முன்னே நடைபெறும் பாட்டுக்கு நாமே வரப்போகிருேம். நீயும் வந்து பார்' என்று பக்தருக்குக் கட்டளே கிடைத்தது. ஆதலின் அவர் போயிருக்கிருர். பாட்டு ஆரம்பமாகிவிட்டது. முன்னே சொன்ன சங்கீத வித்துவான் பாடுகிருர். சாரீரம் கணகன வென்றிருக்கிறது; பாட்டுத் தெளிவாக இருக்கிறது: இசையோ உள்ளத்தை அள்ளுகிறது. கூட்டம் கடல் போலப் பரந்திருக்கிறது. இப்போது பக்தருக்குப் பாட் டிலே மனம் ஒடவில்லை. அந்தக் கூட்டத்தில் இறைவன் வருவதாகச் சொல்லியிருக்கிருனே என்று ஆர்வத்தோடு அவனைத் தேடினர். எங்கும் காணவில்லை. மக்களே எங்கும் நிறைந்திருந்தனர். - . .

திடீரென்று பாட்டு கின்றது. சங்கீத வித்துவாளுல் பாட முடியவில்லை. அவர் தொண்டை பேசவில்லை. கூட்டம் கலந்துவிட்டது. அவரும் போய்விட்டார். கோயிலில் யாரும் இல்லை. இறைவன் கேரில் வருவதாக அருளினரே, வரவில்லையே என்று பக்தர் மன வருத்தத்தோடு ஒரு மூல யில் சோர்வோடு உட்கார்ந்திருந்தார். . . . . .

அப்போது ஒருவர் அங்கே வந்தார். அவர் பாடத் தொடங்கினர். பக்தர் கிமிர்ந்து பார்த்தார். கோழை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/93&oldid=563236" இலிருந்து மீள்விக்கப்பட்டது