பக்கம்:சிற்றம்பலம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சிற்றம்பலம்

மிடற்ருேடு முன்பு பாடினரே அந்தப் பேர்வழி. அவர் பாடினர். அன்று பாடின மாதிரித்தான் பாடினர். "ஐயோ! காக்கைக் குரலே! என்று தோன்றியது பக்த ருக்கு வந்தவர் பாடிக்கொண்டிருந்தார்; கண்ணே மூடிக் கொண்டு வெறும் காமங்களையே பாட்டைப்போல இழுத் கொண்டிருந்தார். அதைக் கேட்கக் கேட்கப் பக்தருக்கு ஏதோ ஒருவித இன்பம் உண்டாயிற்று. அந்த நாமங்களே இருதயத்திலிருந்து அவர் கூறினர்; அதனுல்தான் பக்த ருக்கு அது சுவையாக இருந்தது. அதற்குள் ஒர் அதிசயம் நிகழ்ந்தது. ஏழைக்கு முன்னே சிறிது தூரத்தில் சிவபெரு மான் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளியிருந்தான்! பக்த ருக்குத் திடுக்கிட்டது. இறைவன் தலையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்துகொண்டிருந்தான். கண்ணே மூடிக்கொண்டு பாடிய ஏழை இறைவன் அங்கே அமர்ந்திருப்பதை உணர வில்லை. அவர் கண்ணே மூடியபடியே கோழை மிடற்ருேடு கவியோ கீர்த்தனமோ இல்லாத வெறுஞ் சொற்களேத் தம் மனம் போனபடி இசை போலப் பாடிக் கொண் டிருந்தார். இறைவன் ஒரு காலேக்கு ஒரு கால் மகிழ்ச்சி மீதுளர்ந்து ஆடினன். அமர்ந்தபடியே அசைந்தாடியவன் எழுந்திருந்தே ஆனந்த கடனம் ஆடத் தொடங்கி விட்டான். - -

திடீரென்று கனவு கலந்தது. 'அடடா இன்னும் சிறிது நேரம் கனவு காணுமற் போனேனே! இறைவன் திருநடனத்தைத் தரிசித்துக்கொண்டே இருந்திருக்க லாமே!" என்று வருந்தினர் பக்தர். - - - இப்போது அவருக்கு, ஈசன் யாருடைய பாட்டில் மகிழ்ச்சி அடைகிருன் என்பது தெளிவாகிவிட்ட்து. உள்ளத்தில் பக்தியோடு பாடுகிறவர்கள் கோழை யால் இருமும் மிடறுடையவர்களாக இருக்கட்டும்; அதனம் குறையில்லை. அவர்கள் பாடுவது கவியென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/94&oldid=563237" இலிருந்து மீள்விக்கப்பட்டது