பக்கம்:சிற்றம்பலம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சிற்றம்பலம்

சொல் யாவை, அவற்றை மகிழும். பாட்டாக நினைத்து அவர் பாடினும் அவை வெறும் சொற்கள் என்று குறிப்பிக்க, சொன சொல்' என்ருர்)

r ★ - இனி அந்த இடம் இன்னதென்று சொல்லப் புகுகிருர் ஞானசம்பந்தப் பிள்ளையார். இயற்கையின் எழிலிலே இறைவனேக் கண்டு அந்த எழிலையும் வாயாரப் பாடும் தமிழ் விரகராதலின் இங்கே வைகாவூர்த் தலத்தின் வளப் பத்தைச் சொற்சித்திரமாகத் தீட்டுகிருர், திருவைகாவூர் என்ற தலம் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் இருப்பது. வைகா வைகாவில், வைகாவூர் என்று அதன் பெயர் வழங்கும். சம்பந்தர் வைகாவில் என்று குறிக்கிருர், மயிலாப்பூருக்கு மயிலாப்பு, மயிலாப்பில்,மயிலாப்பூர்என்று மூன்று வகையில் பெயர் வழங்கும். அதுபோன்றது. இது.

வைகாவூர் மருத நிலத்தில் அமைந்திருப்பது. வயல்கள் மிகுதியாக உள்ள தலம் அது வயலே அடுத்து ஒரு தோட்டம்; அங்கே வாழையும் கமுகும் தென்னையும் கன்

ருக வளர்ந்திருக்கின்றன. -

முதிர்ந்த தென்ன மரத்தில் கன்ருக முற்றிப் பழுத்த தேங்காய் காற்று வீசும்போது கீழே விழுகிறது. அந்த மரத்தைவிட இள மரம் ஒன்று அதைவிட உயரம் குறை வாக அருகே நிற்கிறது. மேலிருந்து விழுந்த முதிய தேங்காய் இந்தச் சிறிய தென்ன மரத்தின்மேல் விழுந்து தாக்க, அதி லிருக்கின்ற இளநீர் குலேயிலிருந்து பிய்ந்து விழுகிறது. முற்றின தேங்காயும் இளருேம் கீழே விழும்போது தென்ன மரத்தைவிடச் சிறிது குட்டையாக இருக்கும் கமுக மரத் தில் விழுகின்றன. அதனல் கமுகங் குலைகள் சிதறு கின்றன. மறுபடி அந்த இளநீரும் முற்றிய தேங்காயும் கமுகுக்கும் குட்டையாக வளர்ந்துள்ள வாழையின்மேல் விழுகின்றன. அந்த வாழை தாறு போட்டுப் பழுத்து கிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/96&oldid=563239" இலிருந்து மீள்விக்கப்பட்டது