பக்கம்:சிற்றம்பலம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழையடியார் சொல் - 87.

கிறது. வாழைப் பழக் குலேயின்மேல் இளநீரும் தேங்காயும் விழுந்து வாழைப்பழத்தை உதிரச் செய்கின்றன. அவை கீழே உள்ள வயல்களில் விழுகின்றன. உயரத்தி லிருந்து விழுந்தமையாலும் தேங்காயால் அடிபட்ட மையிலுைம் வாழைப்பழம் பழமாக இராமல் பஞ்சாமிர்க மாகிவிடுகிறது. வயலில் இப்படிப் பலகாலம் பழங்கள் சிதறிச் சிதைந்து ஊறிச் சேறு போல ஆகிவிடுகின்றன.

இப்படி ஒர் இயற்கைக் காட்சியைத் திருவைகா வூரிலே வைத்து வருணிக்கிருர் சம்பந்தர்.

தாழை.இள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை

தாறுசிதறி . . . . . -

வாழையுதிர் வீழ்கணிகள் ஊறிவயல் சேறுசெயும்

வைகாவில்ே. -

(தென்னேயின் இளநீரும் முதிய காயும் கமுக மரத்தில் விழ, அதில் வரிசையாக உள்ள குலைகள் சிதற, அப்பால் அவை விழுந்த வாழை மரத்திலிருந்து உகிர்ந்து வீழ்ந்த கனிகள் ஊறி வயலிலே சேற்றைச் செய்யும் வைகாவில் என்ற தலம். மகிழும் ஈசன் இடம் வைகாவில் என்று கூட்டவேண்டும்.

தாழை தென்னே. முகிய காய் விழ, அது மோகியதால் கீழிருக்கும் தென்னேயிலிருந்து இளநீரும் வீழ்ந்தது. கிரை . வரிசையாக உள்ள தாறு - குலே இங்கே கமுகங் குலே. சிதறி என்பதற்குச் சிதற என்று பொருள் கொள்க; எச்சத்திரிபு. உகிர் வீழ் கனிகள் - உதிர்ந்து வீழ்ந்த கனிகள்; வரிந்து புனைந்த ; பந்து என்ற பொருளில் வரிப்பு:ன பந்து என்று வந்தது போன்ற பிரயோகம் இது. சேறு செயும் . சேற்றை உண்டாக்கும். வைகாவில் - கிரு வைகாவூர், ஏ: அசை கிலே.)

@ಪಿ35 சொன்ன வருணனையோடு ஒருபுடை ஒப்புமை உடையது, பின் வரும் சிந்தாமணிப் பாட்டில் வரும் வருணனே. - ... --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/97&oldid=563240" இலிருந்து மீள்விக்கப்பட்டது