பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தொடர்பான நுட்பங்கள் எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொண்டாள்.

மாதவி-பேரழகி

மாதவிக்கு வயது பன்னிரண்டு ஆனது. அவள் கட்டழகுடன் காணப்பட்டாள். அவளது கூந்தல், திறத்தில் கருநாவல் பழத்தை ஒத்திருந்தது. அவளுடைய கண்கள் அகன்று சிவந்த ரேகைகளைப் பெற்றிருந்தன; புருவம் வான் வில்லைப் போல வளைந்து மயிர் அடர்ந்து இருந்தது. அம் மங்கையின் முகம் அகன்று மலர்ந்த தாமரை மலரை ஒத். திருந்தது. அவள் மூக்குக் குமிழம் பூவைப் போல இருந்தது; பல் வரிசைகள் முத்து வரிசைப் போலக் காணபபட்டன. அவளுடைய உதடுகள் கொல்வைக் கனிபோலச் சிவந்து இருந்தன. அவள் பேச்சு கிளிகொஞ்சுவதுபோல இருந்தது. அவளது நடை அன்னப் பறவைகளின் அழகிய நடையை ஒத்திருந்தது .

அரங்கேற்றம்

நடனப் பயிற்சி பெற்று முடிந்தபிறகு, பயிற்சி பெற்ற கணிகை அரசன், பிரபுக்கள் முதலிய பெரு, மக்கள் முன்னிலையில் முதல்முதல நடனம செய் தல ஒரு வழக்கம ஆகும். அது மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும் அஃது அரங்கு ஏற்றம்’ எனப்படும். அன்றைய நடனம் சிறநத முறையில் ஆடப் படின், அக்கணிகைக்கு அரசன் பரிசளிப்பான்; பிரபுக்களும் பரிசளிப்பர்; அவள் பெயர் நல்ல முறையில் நகரம் எங்கும் பரவும். அரசர், பிரபுக்கள் இவர்கள் வீட்டு விசேடங்களில் வந்து