பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

நடிப்பதற்கும் அவளுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். சுருங்கக்கூறின், அரங்கேற்று விழா அக் கணிகையது எதிர்கால வாழ்வினைத் தீர்மானிப்பது என்னலாம்.

இத்தகைய முறையில் மாதவியும் தனது தடணத் திறமையை உலகத்திற்குக் காட்ட வேண்டியவள். ஆனாள். அரங்கேற்றத்திற்கு ஒரு நாள் குறிக்கப்பட்டது. “புகழ்பெற்ற நடிகப் பெண்மணியான சித்திராபதி மகளான மாதவி நடனம் ஆடப் போகிறாள்” என்ற செய்தி நகரம் எங்கும் பரவியது.

நடன அரங்கம்

மாதவியின் நடன அரங்கேற்றத்திற்காகப் பெரிய நடன அரங்கம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு நடனமேடை தனிச்சிறப்புச் செய்யப்பட்டது. நீங்கள் இக்கால நாடக மேடைகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா; அது போலவே அந்த நடன அரங்கமும் இருந்தது. மேடையில் கணிகை நடிப்பதற்கு அகன்ற இடம் இருந்தது. நடிப்பவளுக்குப் பின்பக்கம் நடன ஆசிரியர்களும் இசை ஆசிரியர்களும் நின்று துணை செய்ய வசதியாக இடம் இருந்தது, மேடைக்கு எதிரில் அரசர், அமைச்சர், பிரபுக்கள் அமரத்தக்க உயர்தர ஆசனங்களும் அவற்றுக்குப் பின்புறம் அலுவலர், பொது மக்கள் முதலியோர் இருக்கத் தக்க ஆசனங்களும் முறைப்படிப் போடப் பட்டிருந்தன.

நடன மண்டபம்

அரங்கேற்றத்திற்கு உரியநாள் வந்தது. அன்று, முன் சொன்ன நடன அரங்கம் சிறந்த