பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


கோவலன் மாதவியைத் துறத்தல்

மாதவி பாடிய பாடலைக் கேட்டு கோவலன் சினங்கொண்டான், ‘இவள் வேறு ஆடவனிடம் விருப்பம் கொண்டிருக்கிறாள் போலும்’ என்று தவறாக எண்ணி விட்டான்; உடனே அவன் முகம் சிவந்தது; உதடுகன் துடிதுடித்தன; விழிகள் சிவத்தன; ஆசனத்தை விட்டு எழுந்தான். கோவலன் படபடப்பைக் கண்ட மாதவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் அவனை அச்சத்தோடு நோக்கினாள். சினத்தில் தன்னை மறந்த கோவலன் மாதவியை நோக்கி, “வஞ்சக எண்ணம் கொண்டவர் நாடக மகளிர் என்று சான்றோர் கூறியது உண்மை என்பதை இப்பொழுது உணர்ந்தேன். நீ என்னை உண்மையாகக் காதலிக்கின்றாய் என்று. எண்ணினேன்; அதனால் என் ஆருயிர்த் துணைவியாகிய கண்ணகியை மறந்தேன்; அவளைக் கண் கலங்கவிட்டு உன்னுடன் நாளைப் போக்கினேன். அம்மட்டோ! எனது முன்னோர் தேடி வைத்த குன்றம் அனைய செல்வத்தையும் உனக்குத் தோற்றேன். நீ என்னிடம் பொய்வேடம் கொண்டு நடித்தனை என்பதை உன் பாட்டுப் பலப்படுத்திவிட்டது. போதும் உனது நட்பு. நான் செல். கிறேன் இனி உனது முகத்தில் விழிப்பதில்லை,” என்று சினந்து கூறி அகன்றான்.

கோவலன் வேறுப்பு

மாதவி அவன் சீநீற்றவுரை கேட்டு, இடியோசை கேட்ட நாகம்போல்’ ஆனாள். அவள் விதியை. நொந்தவண்ணம் தன் மாளிகை சென்றாள்; அன்று மாலை, கோவலன் பிரிவாற்றாமையால் அவனுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்தாள்; தாழை,