உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

சிலம்பை விற்றுவரும் பணத்தை முதலாகக் கொண்டு வாணிகம் செய்து. இழந்த பொருளை ஈடுசெய்யலாம். இன்று இரவின் கடையாமத்தில் நீ என்னுடன் வருக; நாம் பீடுமிக்க மாட மதுரைக்குச் செல்வோம்’ என்றான். கண்ணகி கற்புடை மடந்தை ஆதலின் கணவன் விருப்பப்படி மதுரை செல்ல உடன்பட்டாள்.

புகாரிலிருந்து உறையூர் வரை

கண்ணகியும் கோவலனும் மறுநாள் விடியற் காலையில் ஒருவர்க்கும் தெரியாமல் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி வழி நடந்தனர்; வணிக அரசன் மகளாகப்பிறந்து மற்றொரு வணிக அரசன் மகனுக்கு மனைவியாகி வழி நடந்து அறியாத உத்தமி கால் கடுக்க வழி நடந்தாள் அவளது வழிநடைத் துன்பத்தை மாற்றக் கோவலன் பல செய்திகளைக் கூறிக் கொண்டே வழி நடந்தான். இருவரும் பல இடங்களில் தங்கித் தங்கி நடந்தனர்; நடந்து சீரங்கத்தை அடைந்தனர்; அங்கிருந்த சோலையில் மாதவர் இருந்து சமய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர் அங்கு இருந்தவருள் கவுந்தி அடிகள் என்ற பெண் துறவி யார் கோவலனையும் கண்ணகியையும் அன்புடன் வரவேற்றனர்; அவர்கள் வரலாற்றைக் கேட்டு அறிந்து ஆறுதல் கூறினர். மறுநாள் அவரும் அவர்களோடு மதுரை செல்லப் புறப்பட்டனர்; புறப்பட்டு வழி நடந்து உறையூரில் தங்கினர்.

மூன்று வழிகள்

மறுநாள் அவர்கள் உறையூறைவிட்டு மதுரை நோக்கி நடக்கலாயினர்; நடுப்பகலில் ஒரு சோலை-