35
கேட்டது; அந்தணர் நான்மறை ஒதும் ஒசையும், மாதவர் விடியற்காலையில் மந்திரம் ஓதுதலால் எழுந்த ஒசையும், வீரர் தத்தம் வீரத்திற்கு எடுத்த வரிசையையுடைய முரசம் முதலிய நாள் அணி ஓசையும், போர்க் களிறுகளின் முழக்கம், புதியனவாகக் காடுகளிலிலிருந்து பிடித்துக்கொண்டு வந்த யானைகளின் முழக்கமும், பந்திதோறும் நிறை குதிரைகள் போர் நினைந்து ஆலித்த ஒசையும் உழவர் மருத நிலந்தோறும் காலையில் கொட்டியகிணைப்பறை ஒசையும் பிறவகை ஓசைகளும் ஒன்று சேர்ந்து கடல் ஒலிபோல ஒலித்தன.
வையை யாறு
மதுரை மாநகர்க்குத் தன் நன்னீரால் உண்ணிர் உதவும் தாய் போன்றவள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, அவளுக்கு இரண்டு கரைகளிலும் இருந்த குரவம், கோங்கு வேங்கை, வெண் கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், சண்பகம், பாதரி முதலிய மரங்களின் மலர்கள் பூந்துகில்'ஆக விளங்கியது; கரைகளின் உட்பக்கமாக முளைத்திருந்த குருக்கத்தி, செம்முல்லை,முசுட்டை, மோசி மல்லிகை, குட்டிப்பிடவம், இருவாட்சி முதலிய மலர்களும் பூங்கொடிகளும் மேகலை"யாக விளக்க முற்றன; கரைகளில் இருந்து உகுத்த முருக்க மலர்கள் சிவந்த வாயாகக் காட்சி அளித்தது; அருவி நீரோடு ஒயாது வந்த முல்லை அரும்புகள் பற்களாகக் காணப்பட்டன; குறுக்கே மறிந்தும் நெடுக ஒடியும் திரிந்த கயல்மீன்கள் கண்களாக விளங்கின. இரண்டு பக்கங்களிலும் அலைகள் அரித்த கரு-