பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மணல் கூந்தாலகத் தெரிந்தது. இத்தகைய சிறப் பினையுடைய வையை என்னும் மடமங்கை நாட்டு: மக்களைப் பாதுகாத்ததற்குப் பல பொருள்களையும் விளைத்துத் தரும் ஒழுக்கத்தினை உடையவள்; புலவரால் புகழப்பட்டவள்; தன்னைச் சேர்ந்தவர்க்கு எல்லை இன்றி இன்பம் அளித்தலில் திருமகளை ஒத்தவள்; பருவமழை பொய்யாததாலும் வேற்று வேந்தர் பாண்டிய நாட்டைக் கவராமையாலும் ‘தென்னர் குலக்கொடி’ எனப் பெயர் பெற்றவள்.

பல கோவில்கள்

மதுரை மாநகரம் பழைய காலத்திலிருந்தே, சமயத்திற்கும் வரலாற்றுக்கும் பெயர் பெற்ற, இடமாகும். அங்குப் பல கோயில்கள் நீண்ட கால மாக இருந்தன. நெற்றிக் கண்ணையுடைய சிவ பிரான் கோயில், கருடக் கொடியை உயர்த்திய, திருமால் கோயில், கலப்பையைக் கொடியில் எழுதப்பெற்ற பலராமன் கோயில், சேவல் கொடி உடைய செவ்வேள் கோயில், மன்னவன. கோயில் அறவோர் பள்ளி முதலியன இருந்தன.

மாநகரம்

மதுரை மாநகரம் ஒருகோட்டை மதிலுக்குள் இருந்தது. அதனைச் சூழ ஆழமான அகழி ஒன்று. இருந்தது. அதற்கு அப்பால் காவற்காடு இருந்தது. கோட்டை வாயிலை யவனர் வாளேந்திக் காத்து. தந்தனர். பாண்டி நாட்டுத் துறைமுக நகரமான தொண்டியில் இறக்குமதியான அகிலும் பட்டும் சந்தனமும் கர்ப்பூரமும் பிறவும் மதுரையில் விற்கப்பட்டன. அங்கங்கு நாடக அரங்குகள் இருந்தன; இசை அரங்குகள் இயங்கின; நடன