பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

புடைத்து உண்பதே நல்லது. நீ கவலைப்படாதே’ என்று கூறிக் கொன்றது. அது கண்ட நீ மனம் வருந்திச் சென்று அக்கொடியவனுடைய உற்றார் உறவினர்க்கு வேண்டிய அளவு பொருள் ஈந்து பல ஆண்டுகள் காப்பாற்றினை.

“நான் அறிந்த அளவில், நீ இப் பிறவியில் நல்லறமே செய்தனை. அங்ஙனம் இருந்தும், நீ இவ்வாறு மனைவியுடன் வந்து துன்புறுவதற்கு முற்பிறப்பில் செய்த தீவினையே காரணமாக இருத்தல் வேண்டும்,” என்றான்.

கோவலன் கண்ட கனவு

கோவலன் அவனை நோக்கி, “மறையவனே, இன்று வைகறையில் ஒரு கனவு கண்டேன். ஆதலின் விரைந்து பலிக்கக்கூடும். இந்நகரத்தில் ஒரு கீழ் மகனால் எனது கூறை கொள்ளப்பட்டது; கண்ணகி நடுங்கித் துயர் உற்றாள்; நான் கிடா மீது ஏறினேன்; என் காதலியுடன் பற்றற்றோர் பெறும் பேற்றைப் பெற்றேன். மாதவி மணிமேகலையைப் புத்தபகவானிடம் ஒப்புவித்தாள். இந் நிகழ்ச்சிகள் பலிக்கக்கூடும்” என்றான்.

மாதரி இல்லம்

அப்பொழுது கவுந்தியடிகளும் மறையவனும், “நீங்கள் இருவரும் தவசிகள் இருக்கும் இடத்தில் இருத்தல் நன்றன்று? நகருக்குட் புகுந்து தங்குதலே நல்லது” என்றனர். அவ்வமயம் அங்கு மாதரி என்ற இடைக்குல முதியாள் வந்தாள். வந்து கவுந்தி அடிகளைப் பணிந்தாள். உடனே ‘அடிகள் அவளை