பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அதனில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களையும் பசும் பொன்னால் இயன்ற சிலம்பையும் கண்ட பொற்கொல்லன் பெரு வியப்பு அடைந்தான். அவன் கோவலனைப் பார்த்து “ஐயா, கோப்பெருந்தேவியரே இதனை அணியத் தக்கவர் வேறெவர்க்கும் இது தகுதி அன்று. ஆதலின் இச் சிலம்பைப் பற்றி யான் அரசர் பெருமானிடம்கூறி: அவர் உள்ளத்தை அறிந்து வருவேன்; அதுவரை நீர் இங்கு இருக்கலாம்,” எனறு ஓர் இடத்தைக் காட்டிக் கோவலனை அங்கு இருக்கச் செய்து, அரண்மனையை நோக்கி விரைந்து சென்றான்.

அரண்மனையில் ஆடல்-பாடல்

இங்ஙனம் பொற்கொல்லன் செல்ல அதே நேரத்தில் பாண்டியன் அரண்மனையில் இருந்த அரங்கத்தில் நாடகமகளிரது இசைவிருந்தும் நடன விருந்தும் நடைபெற்றன. அரசனும் அரசியும் அவற்றைக் கண்களிப்பக் கண்டுகொண்டு இருந்தனர். அரசனான பாண்டியன்-நெடுஞ்செழியன் சிறந்த இசைப்புலவன்; நடனக் கலையை நன்கு அறிந்தவன்; சிறந்த தமிழ்ப் புலவன். ஆதலால் அவன் இசையையும் நடனத்தையும் நன்றாக அநுபவித்தான். அவன் மனைவி ‘தலைவலி என்று கூறி அந்தப்புரம் சென்றுவிட்டாள். இசை விருந்து அளித்த மகளிர் தமிழ்ப் பண்களை இசைத்துக் குழல், யாழ் முதலிய கருவிகளின் துணைக்கொண்டு பாடினர். அப்பாடல்கள் செவிக்கும் உள்ளத்திற்கும் பேரின்பத்தை அளித்தன. நடன மகளிர் பலவகை நடனங்களை மிகவும் திறமையாக நடித்துக் காட்டினர். பாண்டியன் உள்ளம் மகிழ்ந்து அம்மகளிர்க்குப் பல்வகைப் பரிசுகளை