பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

வழங்கினான். அம்மகளிரும் பிறரும் அரண்மனையை விட்டு அகன்றனர். பிறகு பாண்டியன், ‘தலைவலி’ என்று சொல்லிச் சென்ற அரச மாதேவியைக் காண விரும்பினான். அதனால் அவளது அந்தப்புரம்நோக்கி விரைந்து நடந்தான்.

பொற்கொல்லன் சூழ்ச்சி

அந்தச் சமயத்தில், கோவலனை விடடுப் பிரிந்த பொற்கொல்லன் அரண்மனைக்குள் நுழைந்தான். அவன் பல நாட்களுக்கு முன்னர் அரச மாதேவியின் காற்சிலம்பு ஒன்றை பழுது பார்க்க எடுத்துச் சென்றான். அதனைத் தான் எடுத்துக் கொண்டான்; அது காணப்படவிலலை என்றும் தேடி வருவதாகவும் அரசியிடம் கூறி வந்தான் கோவலன் அக்கொடியவனிடம் கண்ணகியின் சிலம்பைக் காட்டினது தவறாக முடிநதது. அவன் அரண்மனை நோக்கி வரும்பொழுது “இப் புதியவனை, அரசமாதேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வன்” என்று அரசனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்வேன், என்று தனக்குள் முடிவு செய்து கொண்டான்

அவசரத்தில் அரசன் ஆணை

இந்தக் கொடிய எண்ணத்துடன் வந்த பொற்கொல்லன், அவசரமாக அந்தப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசனைக் கண்டான்; உடனே தரையில் வீழ்ந்து பணிந்தான். அரசன் அவசரமாகப் போக வேண்டியவன் ஆதலால். பதட்டத்துடன்: “என்ன செய்தி?” என்றான்.