பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

புரண்டு கிடக்கத் தக்கதோ? பாவியாகிய நான் செய்த தீவினை தான் எனக்கு இக்கொடிய காட்சியை அளிக்கின்றதோ? பாண்டியன் நெறி தவறிய செயலால் உமது உயிரா போக வேண்டும்? எனது வாழ்வன்றோ இதாலைந்தது! இந்நாளில் பத்தினிகளும் சான்றோரும் இருப்பின் இந்த அநீதி நடவாது ...என்னே என் கொடுவினை!” என்று பலவாறு புலம்பித் தன் கணவன் உடலைத் தழுவிக் கொண்டாள்.

அவ்வளவில் கோவலன் உயிர் பெற்றான்; கண் பெற்றுக் கண்ணகியை நோக்கி, நிறைமதி: போன்ற நின் முகம் வாடியதேன்?” என்று கூறி அவளது முகத்தைக் கையால் துடைத்தான், கண்ணகி அவன் திருவடிகளை இரண்டு கைகளாலும் பற்றி வணங்கினாள். கோலலன் “நீ, இங்கு இருப்பாயாக’ என்று கூறி பிணமானான்.

இந்நிகழ்ச்சி கண்ணகிக்கு மயக்கத்தை உண் டாக்கியது. அவள் செய்வகை தோன்றாது சோக நிலையில் நின்றாள். பிறகு ஒருவாறு துணிந்து பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தாள்.


11. கண்ணகி வழக்குரைத்தல்

கோப்பெருந்தேவி கண்ட கனவு

பாண்டியனை ஆடு அரங்கத்தில் விட்டுச்சென்ற அரச மாதேவி தன் பள்ளியிற் படுத்தான்; ஒரு கனவு கண்டாள், அவள் கனவில், பாண்டியனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் தரையில் விழக் கண்டாள்; அரண்மனை வாயிலில் கட்டியிருந்த மணியின் குரல் அதிரக் கேட்டாள்; எட்டுத்-