பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

திசைகளும் அதிரக் கண்டாள்; சூரியனை இருள் விழுங்கக் கண்டாள்; இரவில் இந்திர வில் வானத்தில் தோன்றக் கண்டாள்; பகலில் விண்மீன் விழக் கண்டாள்; இக்கொடிய காட்சி, பாண்டியனுக்கு வர இருக்கும் துன்பத்தை அறிவிப்பது என்பதை உணர்ந்தாள்.

அரசி அரசனைக் காணல்

அரச மாதேவி, தான் கண்ட கனவினைத் தன் தோழியர்க்குக் கூறினாள்; உடனே அரசனைச் சென்று காணப் புறப்பட்டாள்; பணிப்பெண்கள் கண்ணாடி உறர்ந்தபட்டாடைகள், துரபவகைகள் தீபவகைகள், சந்தனம் முதலிய மணமிகுந்த கலவைச் சாந்துகள், பலவகை மலர் மாலைகள், விசிறிகள் முதலிய பலவகைப் பொருள்களைத் தட்டுகளில் ஏந்தியவராய் அரச மாதேவியுடன் சென்றனர்; அரசனது இருப்பிடத்தை அடைந்ததும் அப்பொருள்களை வைத்துவிட்டு அகன்றனர்! அரச மாதேவி, அரசனிடம் தான் கண்டதீக் கன வினைப் பற்றிக் கூறத் தொடங்கினாள்.

அரண்மனை வாயிலில் கண்ணகி

அச்சமயத்தில் கோப ஆவேசங் கொண்ட கண்ணகி கண்களில் தீப்பொறி பறக்க அரண்மனை வாயிலை அடைந்தாள்; அங்கு இருந்த வாயிற் காவலனை உறுத்து நோக்கி,"அரண்மனை வாயிற் காவலனே, அறிவு அற்று முறை தவறிய அரசனது அரண்மனை வாயிற்காவலனே. ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்தியவளும், கணவனை இழந்தவளும் ஆகிய ஒருத்தி நின்னைக் காண வேண்டும் என்கிறாள் என்பதனை தின் அரசனுக்ரு அறிவிப்பாயாக", என்றாள்.