பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


காவலன் கலக்கவுரை

காவலன் அவளுடைய தீப்பொரி பறக்கும் கண்களையும் கார்மேகம் நிலத்திற் படிந்ததுபோலச் சோர்ந்து நிலத்தின் மீது புரளும் கருங்கூந்தலையும். சோகரசம் பொருந்திய முகத்தையும் துடிதுடிக்கும் உதடுகளையும் நடுங்கும் கைகளையும் கண்டு. அஞ்சினான். உடனே அரண்மனைக்குள் ஒடினான்; அரசனைக் கண்டு அடிப்பணிந்தான்; “அரசே, நின்கொற்றம் வாழ்க! கொற்கைவேந்தே, வாழ்க பொதியமலைத் தலைவனே வாழ்க! பழியற்ற பெருமானே, வாழ்க! நமது வாயிலில் இள மங்கை ஒருத்தி வந்து நிற்கின்றாள். அவள் எருமைத்தலை அசுரனைக் கொன்ற கொற்றவை. அல்லள்; ஏழு தேவதைகளில் ஒருத்தியாகிய பிடாரி. அல்லள், சிவபிரானை நடனம் செய்வித்த பத்திர காளி அல்லள், அச்சம் தரத்தக்க காட்டையேதான். வாழ் இடமாகக் கொண்ட காளி அல்லள்; தாருகன் என்று அசுரன் பெரிய மார்பைக் கிழித்த பெண்ணும் அல்லள்; அவள் மிக்க கோபம் உடையவள் போலவும் மாற்சர்யம் உண்டயவள் போலவும் காணப்படுகிறாள். அழகிய பொன் வேலைப்பாடு அமைந்த சிலம்பு ஒன்றைக கையில் பிடித்திருக்கிறாள். அவள் தன் கணவனை இழந்தவளாம். நின்னைக் காண வந்திருக்கிறாள், மன்ன, நினது. வாழ்நாள் சிறப்பதாகும்!” என்று கூறிப் பணிந்தான்.

அரசன் முன் கண்ணகி

பாண்டியர் பெருமானான நெடுஞ்செழியன் “அப்படியா! அவளை இங்கே வரவிடு” என்றான். உடனே காவலன் காற்றெனப் பறந்து,