பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


மதுராபதி

கண்ணகி, தீப்பற்றி எரிந்த மதுரையைப். பார்த்துக் கொண்டே சென்றாள். அவள் உள்ளம் கனன்றது, அவள் கொல்லனது உலைக்களத்துத் துருத்திப் போல பெருமூச்சு விட்டாள்; பெருந் தெருக்களிலே திரிந்தாள்; சந்துகளில் நடந்தாள். இவ்வாறு அவள் மதுரையில் திரிந்து வருகையில் மதுராபதி என்னும் மதுரை மாநகரின் அதி. தேவதை பெண்ணுருத் தாங்கிக் கண்ணகியின் பின் புறமாக வந்தாள்; வந்து, “நங்காய், நீ வாழ்க; நான் கூறுவதைக் கேட்பாயாக” என்றாள். உடனே கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிப் பார்த்து, “என் பின் வருகின்ற நீ யார்? என் துயரத்தை அறிவையோ ?” என்று கேட்டாள்.

பாண்டியன் சிறப்பு

உடனே மதுராபதி, “அம்மே! நான் உனது பொறுத்தற்கரிய துன்பத்தை அறிவேன். நான் சொல்ல வந்தேன். நான் உனது கணவற்கு நேர்ந்த கதியினை எண்ணி மிக வருந்துகிறேன். நான் இந் நகரத்தைக் காக்கும் அதிதேவதை என் பெயர் ‘மதுராபதி’ என்பது. நான் கூறுவதைக் கேள். இன்று இறந்த பாண்டியன் மரபு ஆராய்ச்சி மணி ஒசைகேட்டறியாதது. இப்பாண்டியன், குடிகளால் பெரிதும் விரும்பப்பட்டவன். பாண்டியர் ஒழுக்கம் தவறிய செயலைச் செய்தறியார். முற்காலத்தில் கீரந்தை என்ற பார்ப்பனன் காசியாத்திரை சென்றான்; சென்ற பொழுது தன் மனைவியை நோக்கி, நின் தனிமைச்கு வருந்தாதே. பாண்டியன் காவல் நினக்குப் பாதுகாவல் ஆகும்’