பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

சோழ-பாண்டியருடன் போர்

ஒருமுறை சோழ மரபினர் சிலர் பாண்டிய அரசனுடன் சேர்ந்து சேரனைஎதிர்த்தனர். போர் ‘கொங்கர் செங்களம்’ என்ற இடத்தில் நடந்தது. சேரன், யானைக் கூட்டத்தில் புலி பாய்வதைப் போலப் பாய்ந்து பகைவரைப் புறங்காட்டி ஓடச் செய்தான். அதுமுதல் அவன் ஆயுட்காலம் வரை சோழ பாண்டியர் அடங்கிக் கிடந்தனர். சேரன் தமிழ்நாட்டுத் தலைவனாக விளங்கினான்.

பேரரசன்

சேரன் கங்கர், கொங்கர், கொங்கணர் முதலிய பல நாட்டரசரை வென்று தென் இந்தியாவிற் பெருவீரனாக விளக்கமுற்று இருந்தான். அவனது பெயர் இமய முதல் குமரி வரை பரவி இருந்தது.

மலைவளம் காணல்

கண்ணகி வானுலகப் சென்று சில மாதங்கள் ஆயின. ஒருநாள் செங்குட்டுவன் தன் கோப்பெருந்தேவியுடனும் இளங்கோ அடிகளுடனும் பரிவாரங் ளுடனும் பேரியாற்றங்கரை வழியே மலைவளம் காணச் சென்றான். யாவரும் மலை நாட்டு வளத்தைக் கண்டு கொண்டே ஆற்றோரம் சென்றனர்; பிறகு ஓரிடத்தில் தங்கினர்.

சாத்தனார்

சாத்தனார் என்பவர் மதுரையில் இருந்த தமிழ்ப் புலவர். அவர் நெல், வரகு, சோளம் முதலிய கூல (தானிய) வகைகளைக் கொண்ட கடை ஒன்றை வைத்திருந்தார். அவர் நம் செங்-