பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

சாத்தனார் விளக்கம்

அரசனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அரசமாதேவி ஆச்சரியப்பட்டாள். இளங்கோவடிகள் சாத்தனார் முகத்தைப் பார்த்தார். சாத்தனார் புன்முறுவலுடன், “அவள் வரலாற்றை யான் அறிவேன்.” என்று கூறினர். உடனே அனைவரும் “கூறியருளுக” என்றனர். சாத்தனார் வீரபத்தினியின் வரலாற்றை விளங்கவுரைத்தார்.

செங்குட்டுவன் கேள்வி

துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது. அவன் கோப்பெருந்தேவி அறக்கற்பு உடையவன். அரசன் ஒரு நாட்டைக் காப்பது துன்பமுடைய செயலே ஆகும்” என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான்.

அரசி பதில்

பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப்

சி-5