பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள்.

சேரன் செய்த முடிவு

உடனே சேரர் பெருமான் அமைச்சரைப் பார்த்தான. அமைச்சர் அரசனைப் பணிந்து, “அரசே, பத்தினிக்குரிய கல்லைப் பொதிய மலையிலிருந்து கொணர்ந்து காவிரியில் நீராட்டலாம்; அல்லது இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்டலாம் தேவரீர் விருப்பப்படி இரண்டில் ஒன்றைச் செய்யலாம்” என்றனன். அரசன், “அமைச்சரே, நமது தாயார் பொருட்டு நாம் இமயம் சென்றபோது ஆரியமன்னரை வென்றோம் அல்லவா? அவர் மரபினர் ‘அச்சேரன் இப்பொழுது இங்கு வரட்டும்; பார்ப்போம்’ என்று வீரம் பேசுகின்றனராம் ஆதலால் நாம் இமயம் சென்று கல்லைக் கொணர்வதே தக்கது. நமது வடநாட்டு யாத்திரையை மாநகரத்தார்க்கு அறிவித்திடுக. இச்செய்தி பல நாட்டு ஒற்றர் மூலம் பல நாடுகட்கும் பரவி விடும். நம் நண்பரான நூற்றுவர் கன்னர்க்கும்[1] அறிவித்திடுக நாம் அவர்கள் உதவி கொண்டே கங்கையாற்றைக் கடக்கவேண்டும்” என்றான். பின்னர் யாவரும் வஞ்சி மாநகரத் திற்குத் திரும்பினர்.


14. பத்தினிக் கோவில்

வடநாட்டு யாத்திரை

சேரன்-செங்குட்டுவன் குறித்த நாளில்-குறித்த நல்ல நேரத்தில் தன் பரிவாரங்கள் சூழ வஞ்சி


  1. நூற்றுவர், கன்னர், சதகர்ணி என்ற பட்டமுடைய ஆந்திர மன்னர் ஆவர்.