பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அதுவே ஆகும். இந்த இருவகைச் சிறப்பினால் அந்த நகரம் மிக்க சிறப்படைந்து விளங்கியது. அதற்குப் புகார்', ‘பூம்புகார்’ என்ற பெயர்களும் வழங்கின. புகார் நகரம் மிகப் பெரியது: அக நகர், புற நகர் என்ற இரண்டு பிரிவுகளைப் பெற்றி ருந்தது.

அக நகர்

அக நகர் நடுவில் மன்னவன் மாளிகை நடு நாயகமாக வானுற ஓங்கி வளம்பெற விளங்கியது. அதனைச் சூழ்ந்து தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைப்பாகர், படைத்தலைவர், வீரர் என்பவர் விடுதிகளைக் கொண்ட தெருக்கள் திகழ்ந்தன. அரச மாபினர் வாழும் அழகிய தெருக்கள் இருந்தன. அந்தணர் உறையும் அகன்ற தெருக்கள் இருந்தன. வணிகர் வாழும் வளம் மிக்க வீதிகள் காணப்பட்டன. உழவர் வசிக்கும் உணவு மிக்க தெருக்கள் காட்சி அளித்தன. இவற்றுக்கு அப்பால் மருத்துவர், சோதிடர், சூதர்[1], மாகதர்[2], வைதாளிகர்[3], முத்துக் கோப்பவர், நடன மாதர். நாடக மகளிர், ஆடல் ஆசிரியர், இசை ஆசிரியர் நாடக ஆசிரியர் முதலியோர் வாழும் பல தெருக்கள் இருந்தன. இடையிடையே பல கோவில்கள் இருந்தன. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத். தக்கவை-(1) சிவன் கோயில், (2) பெருமாள் கோயில், (3) பலராமன் கோயில், (4) இந்திரன் கோவில், (5) முருகன் கோவில், (6) சூரியன்


  1. சூதர்-நின்று அரசனைப் புகழ்வர்.
  2. மாகதர் உட்கார்ந்து அரசனைப் புகழ்வர்
  3. வைதாளிகர்-பல வகைத் தாளம் இடுபவர்