பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

பெருஞ்சேனையைப் போருக்கென்று தயாரித்திருந்தனர்; செங்குட்டுவன் உத்தர கோசலத்தில் தங்கியதை அறிந்ததும் திடீரென அவன் படைகளை வளைத்துக் கொண்டு தாக்கினர். கனக விசயர் செறுக்கை அடக்க வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்து கொண்ட செங்குட்டுவன் தன் படை வீரர்க்குப் போர் துவக்குமாறு ஆணையிட்டான். உடனே இருதிறத்துப் படைகளும் கை கலந்தன. புலிக் கூட்டத்து நடுவில் சிங்க ஏறு பாய்வதைப் போலச் சேரர் பெருந்தகை உருவிய வாளுடன் பாய்ந்து அரசர் பலரைக் கொன்றான். வஞ்சி வீரர் வாட்போரில் வல்லவர்; அதனால் அவர்கள் வாளுக்குப் பகைவர் பலர் இரையாயினர். போர் பதினெட்டு நாழிகை நடைபெற்றது. முடிவில் கனக விசயர் சிறைப்பட்டனர். சேரன்-செங்குட்டுவன் வெற்றி பெற்றான்.

இமயத்திலிருந்து சிலை கொணர்தல்

பின்னர் அரசனது ஏவலால் படைவீரர் இமயம் சென்று பத்தினியின் உருவத்தைச் செதுக்குவதற்கு உரிய கல்லைத் தேர்ந்து எடுத் தனர்; அதனைக் கங்கையாற்றிற் கொணர்ந்து நீராட்டினர்; நீராட்டிய அக்கல்லைக் கனக விசயர் முடி மீது ஏற்றி வஞ்சி மாநகர் நோக்கிப் புறப்பட்டனர்.

மாடலன் என்ற மறையவன்

சேரன் உத்தரகோசலத்துப் பாசறையில் தங்கி இருந்த பொழுது மாடலன் என்ற மறையவன் ஒருவன் அங்கு வந்தான். அவன் பூம்புகார் நகரத்-