பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பேரவையில் தமிழ் நாட்டுப் பெரும் புலவர்கள் கூடியிருந்தனர். கூட்டத்திற்குச் சாத்தனார் தலைமை வகித்தார். இளங்கோவடிகள், கோவலன்-கண்ணகித் தொடர்பாகத் தாம் பாடிய சிலப்பதிகாரம் என்ற காவியத்தைப் படித்து பொருள் விளக்கி அரங்கேற்றம் செய்தார். புலவர் அனைவரும் கேட்டுப் பெருமகிழ்ச்சிகொண்டு தலை அசைத்துத் தமது பாராட்டை அறிவித்தனர்.

மணிமேகலை அரங்கேற்றம்

மறு நாளும் பேரவை கூடியது. அன்று இளங்கோ அடிகள் பேரவைக்குத் தலைமை தாங்கினார். சாத்தனார் தாம் பாடிய மணிமேகலை என்ற காவியத்தைப் படித்து ஆங்காங்கு பொருள் விளக்கம் செய்தார். அடிகளும் பிற புலவரும் நூலினைப் பாராட்டி மகிழ்ந்தனர். சேர வேந்தனான செங்குட்டுவன் இரு நூல்களையும் பாராட்டிப் பேசினான்; சாத்தனார்க்குத் தக்க பரிசில் நல்கினான்; பல ஊர்களில் இருந்து வந்து அவையைச் சிறப்பித்த புலவர்க்குப் பரிசுகள் அளித்து மகிழ்ந்தான். அன்று முதல் சிலப்பதிகாரமும்-மணிமேகலையும் இரட்டை நூல்கள் என்று கூறப்பட்டன. அவை இரண்டும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் ஆயிரக் கணக்கான தமிழ்மக்களால் விரும்பிக் கற்கப்பட்டு வருகின்றன

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் முப்பது பிரிவுகளை உடையது ஒவ்வொரு பிரிவும் ஒரு 'காதை' எனப்படும். சிலப்பதிகாரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே (1) புகார்க் காண்டம்