பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் உரை

பல வேறு சாத்திரங்களையும், கலைகளையும் பயிலும், ஆய்வு செய்யும் பல்கலைக்கழகங்களாகவும் செயல்பட்டிருக்கின்றன.

இந்து தர்மத்தின் ஒரு பகுதியாகச் சிறுதெய்வங்களும், அதற்கான சிறு கோவில்களும் பீடங்களும் சதுக்கங்களும் மக்கள் கூடிப் பொங்கலிட்டு விழாக் கொண்டாடும் சமுதாயச் சந்திப்பு மையங்களாக விளங்கி வருகின்றன. ஊர் தவறாமல் பொது தேவதைகளாக காளி மாரி சக்தி கோயில்களும் ஏராளமான விநாயகர் கோயில்களும் மக்கள் அன்றாடம் வழிபடும் தெய்வங்களாக விளங்குகின்றன. இத்தகைய பல லட்சக்கணக்கான சிறு தெய்வங்களும் கோவில்களும் நாட்டு மக்களில் மிகப்பெரும்பான்மையாக உள்ள அடித்தட்டு மக்களின் வழிபாட்டு இடங்களாக இருந்து வருகின்றன. இந்த வழிபாட்டு வழி முறைகள் காலத்திற்கேற்றவாறு பல மாற்றங்களையும் கண்டு வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. அவைகளால் இருந்த சில மூடப்பழக்க வழக்கங்களும் கால மாற்றத்தில் நிற்க முடியாமல் நீங்கியுள்ளன. “கண்மூடிப் பழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போகட்டும்” என்று வள்ளலார் குறிப்பிட்டதைப் போல காலத்திற்கொவ்வாத பல மூடப்பழக்க வழக்கங்களும் மறைந்து போயிருக்கின்றன. பல சமுதாயச் சீர்திருத்தவாதிகளும் சமயச் சீர்திருத்தவாதிகளும் கூட இந்து தர்ம வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

குறிப்பாகச் சமுதாயத்திருந்து சாதி வேறுபாடுகள் பாகுபாடுகளுக்கு எதிராக இராமானுஜரும் அப்பரடிகளும், ஆழ்வார்களும் நாயன்மார்களும் மக்களை ஒன்றுபடுத்தி பக்தி மார்க்கத்தை வளர்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், வங்காளம், ஓரிஸா, கர்நாடகம், முதலிய பல பகுதிகளிலும் பக்தி இயக்கங்கள் மக்களிடத்தில் பெரும் விழிப்புணர்வுகளை உண்டாக்கி மக்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது.

இந்திய சமுதாயத்திலும் சமய வழிபாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களில் புத்தமும் சமணமும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்து சமயங்களும் அந்தத் தாக்கங்களை ஜீரணித்து புதிய பிறவிகளை எடுத்து மேலும் விரிவுபட்டு வளர்ந்து வந்திருக்கின்றன. இந்த முன்னேற்றத்தில் ஆதி சங்கரரும் இராமானுஜரும் மத்துவரும் வேறு பல