பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

87


இவ்வாறு நீதி கேட்டுச் சென்ற கண்ணகியைக் கண்டு மதுரை மக்கள், எல்லோரும் மனம் கலங்கி, வளையாத செங்கோல் வளைந்ததோ, தென்னவன் கொற்றம் சிதைந்ததோ, அவனது தடை வெம்மையை விளைவித்துவிட்டதோ, பொற்சிலம்பைக் கையிலேந்தி வரும் இவள் தெய்வத்தன்மை கொண்டவளோ, இதனால் மதுரைக்குத் தீங்கு எதுவும் நேருமோ” என்பன சொல்லி வருந்தி அரசன் நீதி தவறியதால் அவனைப் பழிதூற்றி அம்மதுரை மகளில் சிலர் கொல்லப்பட்டுக் கிடந்த அவள் கணவனை அவளுக்குக் காட்டினார்கள் என்று இளங்கோவடிகள் ஒரு அழுகுரல் நிறைந்த அவலக் காட்சியை நமக்குக் காட்டுகிறார்.

“அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டேங்கி
மல்லல் மதுரையா ரெல்லாருந்தாமயங்கிக்
களையாத துன்பமிக்காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல்

“மன்னவர் மன்னன்மதிக்குடைவாழ்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திது வென்கொல்
மண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைந்த திது வென்கொல்?
செம்பொற் சிலம் பொன்று
கையேந்தி நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்ததிது வென் கொல்

ஐயரியுண்கண் அழுதேங்கி அரற்றுவாள்
தெய்வமுற்றாள் போலும் தகையளிது வென்கொல்
என்பன சொல்லி இணைந்தேங்கி யாற்றவும்
மன்பழிதூற்றும் குடியதே மாமதுரைக்

கம்பலைமாக்கள் கணவனைத் தாங்காட்ட

என்று இளங்கோவடிகளின் காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

இங்கு கம்பலை மாக்கள் என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். கம்பலை என்றால் ஒலி