பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

99


நகரின் கண் உள்ள தியோரையும் சுட்டெரிக்கும் நோக்கில் மதுரை நகரை வலம் வந்து மக்களிடம் குரல் கொடுத்தாள்.

கோவேந்தன் தேவி கொடுவினையாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேனாயினும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறும் பெற்றியகாண் நற்பகலே...

என்று முற்பகலில் ஒருவன் கேடு செய்தால் அதன் பலனாக அவன் பிற்பகலில் கேடு பெறுவான் என்னும் கருத்தைக் குறிப்பிட்டுக் கண்ணகி சினம் தணியாது செல்கிறாள்.

அடுத்து நல்லறம் நாட்டிய மன்னர் வாழ்ந்த புகார் நகரின் பெருமையை முந்திய காதையில் பாண்டிய மன்னன் முன்பாகக் கூறியதைப் போல கற்பிற் சிறந்த பெண்டிரைக் கொண்ட புகார் நகரப் பெருமகளைக் கூறி அத்தகைய பெண்டிர் வழியில் வந்த நான் என் கற்பின் வலிமையைக் காட்டுவேன் என்று சூளுரைக்கிறாள்.

காப்பியத்தில் கண்ணகி கூறும் சோழ நாட்டுப்பத்தினிப் பெண்களின் வரலாறுகளில்,

ஒன்று, சோழ நாட்டில் இருந்த ஒரு கற்புடை மங்கைக்கு வன்னிய மரமும் மடப்பள்ளியும் சான்று கூறியதாக வரலாறு, “நற்பகலே வன்னியமரமும் மடைப்பளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய பொய்குழலாள்” என்று கூறும் காப்பிய வரிகளின் கதையாகும். இக்கதை இன்னும் சோழ நாட்டில் உள்ள திரும்புறம் பயத்திலும் திருமருகலிலும் கூறப்படுகிறது. திருப்புறம் பயத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு “சாட்சிநாதர்” என்றும் பெயரும் உண்டென்பர்.

இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டிருப்பதையும் காணலாம். திருத்தொண்டர் புராணத்-