பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

101


நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
வண்டல் அயல் விடத்தியானோர் மகள் பெற்றால்,
ஒண்டோடி நீயோர் மகற்பெறிற் கொண்ட
கொழுநன் அவளுக்கென்றியானுரைத்த மாற்றம்,
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூறும் திருவிலேற் கென்றெடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்,
கோடிக் கலிங்கம் உடுத்துக்குழல் கட்டி
நீடித்தலையை வணங்கித்தலை சுமந்த
ஆடகடிப்பூம்பாவை”
என்னும் வரலாற்றையும் கூறி
“அவள் போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங்கியானும் மோர் பத்தினியாமாகில்

ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையும்”

என்று குழுரைத்து மதுரையை வலம் வருகிறாள் என்று சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது.

இங்கு கற்பின் பெருமை, பத்தினிப் பெண்டிரின் உறுதி, ஆற்றல் பற்றி வலியுறுத்திக் கூறப்படுகிறது. இது சிலப்பதிகாரக் காப்பியம் கூறும் முக்கிய நெறி முறைகளில் ஒன்றாகும்.

கண்ணகி இவ்வாறு பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்டிரின் வரலாறுகளைக் கூறித் தன்னையும் அவ்வரிசையில் சேர்த்து, நானும் அத்தகைய கற்புடைய மகள் என்பது உண்மையானால் மன்னனோடு “மதுரை நகரையும் அழிப்பேன்” பான்று கூறி,

“நான் மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்

வானக்கடவுளரும், மாதவரும் கேட்டிமின்”

என்று மதுரை நகரில் உள்ள பெண்டிர், ஆடவர், கடவுளர், தவமுடைய முனிவர் ஆகியோருக்கு எடுத்துக்கூறி,

அந்தணர், அறவோர், ஆநிரை, கற்புடை மகளிர், முதியோர், குழந்தைகள் ஆகியோர் நீங்கலாகத் தீயோர் பக்கமே