பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சின மாலைக்காதையில்

102


சேர்வாயாக என்று அக்கினிக்கு ஆணையிட்டு மதுரை நகரை தீக்கரையாக்கினாள் என்பது சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் கூறும் செய்தியாகும்.

“பார்ப்பார் அறவோர், பசுப் பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
“பொற்றொடி ஏவப்புகையழல் மண்டிற்றே

நற்றேரான் கூடல் நகர்”

என்பது காப்பிய வரிகளாகும்.

“எப்போதெப்போது தர்மம் அழிந்து போய்
அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போது நான்
என்னை பிறப்பித்துக் கொள்கிறேன் (4-7)
“நல்லோரைக்காக்கவும் தீயன செய்
வோரை, அழிக்கவும், அறத்தை நிலை
நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்

கிறேன்” (4-8)

என்னும் கீதாவாக்கியங்களும்,

அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்து, உக நூறித்தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப்

பிறந்தனன், தன் பொன் பாதம் ஒதுவாற் பிறப்பு அறுப்பார்

என்னும் கம்பரது சிறந்த கவிதையும் தனிப்பெரும் கடவுளான திருமாலின் அவதார மகிமையைக் கூறுவதாகும். இதில் அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் உயரிய நீதி வலியுறுத்தப்படுவதாகும்.

அரசியல் பிழைத்த மன்னனை விழ்த்தி அதற்குக் காரணமாக இருந்த தீயோரையும் கண்ணகி தனது கற்பின் திறத்தால் எரித்த கதை மூலம் பாரதக் கலாச்சாரத்தின் அடிப்படையான நீதி போதனை இங்கு காட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.