பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

105


முதல் வகுப்பு பூதங்களாகிய பூதங்களுக்குக் தலைமையாய் உடைய பார்ப்பன பூதக் கடவுளும்” என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவதாக:

“பவளச் செஞ்சுடர்திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரை சொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசாலங்குசம் வடிவேல் வடிகயிறு
என இவை பிடித்த கையினனாகி
எண்னருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மண்ணகம் கொண்டு செங்கோலோச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்,
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன

அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்”

என்று அரச பூதக் கடவுளைப் பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள்.

மூன்றாவதாக:

“செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசு முடியொழிய அமைந்த பூனினன்
வாணிக மரபின் நீள் நிலம் ஒம்பி
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்


உழவு தொழில் உதவும் பழுதில் வாழ்க்கைச்
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்,
இளம்பிறை சூடிய இறைவன் வடிவினோர்,

விளங்கொளி பூத வியன் பெருங்கடவுளும்”,

என்று வணிக பட்சக் கடவுளைப் பற்றிச் சிறப்பாக அடிகளார் குறிப்பிடுகிறார்.