பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழற் படுகாதையில்

106


நான்காவதாக :

“மண்ணுறுதிருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற்கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற்கமைந்த பல துறை போகிக்
கலி கெழு கூடற் பலிபெறு பூதத்

தலைவன் என்போன் தானும்”

என்று வேளாண் பூதத்தைக் குறிப்பிட்டும் இவ்வாறு நால்வகை பூதங்களின் கடவுளர்களும் பற்றி எரியும் மதுரை மாநகரைவிட்டு வெளியேறினார்கள் என்று காப்பியம் குறிப்பிடுகிறது. இங்கு நால்வகை வர்ண மக்களின் நிறம் தொழில், கருவிகள் பற்றிய விவரங்களை இளங்கோவடிகள் விரிவாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இதே சமயம் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் அனைத்தையும் சமரசமாகவும் சமநிலையிலுமே அடிகளார் குறிப்பிடுவதைக் காண்கிறோம். நகரை எரித்து முடித்து பெருமூச்சுடன் கண்ணகி நின்றபோது அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் மதுராபதி என்னும் தேவதை வந்து கண்ணகி முன் தோன்றினாள். அதை,

“மாமளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம்
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள்

மதுராபதி என்னும் மாது”

என்று இக்காதையின் முடிவாக வரும் வெண்பா குறிப்பிடுகிறது.