பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

109


பாண்டிய நெடுஞ்செழியனுடைய நல்லாட்சியைப் பற்றிக் கூறும்போது

“காதின்
மறை நாவோசையல்லதியாவதும்
மணி நாவோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சாமன்னரல்லது

குடி பழிதூற்றும் கோலனும்மல்லன்”

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் என்னும் அந்தணன், சேர நாட்டின் பெரும் புகழ் கேள்வியுற்று அங்கு சென்று முத்தீ வளர்த்து, நான்மறை ஓதி, ஐம்பெரும் வேள்விகள் செய்து அறு தொழில் வகுத்து பார்ப்பன வாகைசூடிய செய்தியை இளங்கோவடிகள் சிறப்புறக் கூறுகிறார்.

“தாங்காவிளையுள் நன்னாடதனுள்
வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்
குலவு வேற் சேரன் கொடைத்திறங்கேட்டு
வண்டதமிழ் மறையோருக்கு வானுரை கொடுத்த

திண்டிறல் நெடுவேற் சேரலற் காண் கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலையம் பிற்படச் சென்றாங்கு
ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர்
முத்தீச் செல்வத்து நான் மறைமுற்றி
ஐம்பெரும் வேள்வியும் செய்தொழில் ஓம்பும்
அறுதொழில் அந்தணர் பெறு முறைவகுக்க
நாவலங்கொண்டு நண்ணாரோட்டிப்
பார்ப்பனவாகை சூடி ஏற்புற

நல்கலங் கொண்டு தன் பதிப் பெயர் வோன்”

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.