பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

111



சேரநாடு சென்று திரும்பிய சோழநாட்டுப் பெரு மறையோன் பராசரன் என்போன் பாண்டிய நாட்டில் உள்ள திருத்தங்கல் என்னும் கிராமத்திற்கு வந்து அங்கு அந்தணர் வாழும் பகுதியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறுவர்களை நோக்கி “என்னோடு வேதங்களை ஓதி என்னுடைய பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற அப்பராசரனுக்கு இணையாக அந்தச் சிறுவர்களின் ஒருவனான தக்கிணாமூர்த்தி என்பவன் வேதங்களை ஓதி பராசரனுடைய பரிசுப் பொருள்களைப் பெற்றான் என்னும் செய்தியைப் பாண்டிய நாட்டு அந்தணர்களின் மறையறிவை வெளிப்படுத்தும் வகையில் இளங்கோ வடிகள் மிகவும சிறப்பாகக்கூறுகிறார்.

மதுரைக்கு ஏற்பட்ட சாபத்தின் பகுதியாக இவ்வரலாற்றுக்கதை கூறப்பட்டபோதிலும் அதில் மறையோர் பெருமையும் கல்வி அறிவும் அரச நீதியும் பற்றி சில நுணுக்கங்கள் கூறப்பட்டிருப்பது நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பதுரே அவ்வூர்பப்
பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடைகாட்டம்
பண்டச் சிறுபொதி பாதக்காப்பொடு
களைந்தனன், இருப்போன்.........................
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்
தளர்நடை யாயத்துத் தமர் முதல் நீங்கி
விளையாடு சிறாஅரெல்லாம் சூழ்தரக்
குண்டப்பார்ப்பீர் என்னோடோதியென்
பண்டச்சிறு பொதிகொண்டு போமின் எனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகள் புதல்வன்
ஆலமர்ச் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப்படியோர் முன்னர்த்
தளர்நாவாயினும் மறைவிளி வழா அது

உளமலி உவகை யோடொப்ப வோதத்