பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரைக் காதையில்

112


தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
முத்தப்பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்

தன்பதி பெயர்ந்தனனாக.....................”

என்று சிலப் பதிகாரக் காப்பிய வரிகள் கூறுகின்றன.

பராசரன் அளித்த சிறந்த அணிகலன்களைப் பெற்ற தக்கிணாமூர்த்தி அவைகளை அணிந்து கொண்டிருந்தைக் கண்ட அரசனுடைய காவலர்கள், இவன் புதையலைக் கவர்ந்த பார்ப்பான் எனக்கருதி அரச நீதி தவறி அவனுடைய தந்தையாகிய வார்த்திகனைப் பிடித்து கள்வரை இடும் சிறையில் இட்டு அடைத்து விட்டனர். இதைக் கேள்வியுற்ற வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் அலரிப் புடைத்து துர்க்கையின் கோயிலில் போய் முறையிட, குற்றமற்ற அக்கோயிற்கண் செயற்குரிய பூசைத்தொழில் எல்லாம் முற்றுப் பெற்று அதனுடைய கதவுகள் திறக்க முடியாமல் அடைத்துக் கொண்டன எனவும், மன்னன், அதன் காரணத்தை அறிந்து அறிவில்லாத காவலர்களால் அரச நீதி தவறியது என வருந்தி, வார்த்திகனை விடுவித்து, தவறைப் பெருத்தருளுமாறு வேண்டி அந்த அந்தணனுக்கு அவனது ஊரான திருத்தங்காலையும், அத்துடன் வயலூர் என்னும் செழிப்பான ஊரையும் தானமாகக் கொடுத்து வார்த்திகனுடைய வருத்தத்தைத் தணித்தனர் என்றும் அதன் பின்னர் கூடல் நகர மக்கள் அனைவரும் கேட்கும் வண்ணம் கொற்றவை கோயிலின் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறந்தன வென்றும் சிலப்பதிகாரக் காப்பியக் கதை கூறுகிறது.

“...................நன்கலன்
புனைபவும் பூண்டவும் பொறாஅராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வெளவிய பார்ப்பான் இவனென
இடுசிறைக் கோட்டத்திட்டனராக

வார்த்திகள் மனைவி கார்த்திகை என்போள்