பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

115


இத்தனைக்கும் பின்னரும் "அரசொடு மதுரையும் தீக்கிரையாகும்" என்னும் சொல்லும் உண்டாயிற்று என்று காப்பியக் கதை குறிப்பிடுகிறது.

"ஆடித்திங்கள் பேரிருட் பக்கத்து
அழல் சேர்குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரியுண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறுமெனும்

உரையுமுண்டே நிறை தொடி யோயே"

என்று மதுரைமாதேவி கண்ணகியிடம் கூறிகோபத்தைத்க் தணித்து மேலும் கோவலனின் முன்பிறப்பின் கதையையும் கூறி விதிமுறை சொல்லி ஊழ்வினையால் நிகழ்ந்ததாக எடுத்துக்கூறித் தீயினின்றும் மதுரையை விடுவித்தாள்.

அது கேட்டு கண்ணகி வைகைக் கரை வழியாக மேற்கு முகமாகச் சென்று

"கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள்

குன்றம் அடிவைத் தேறிப்"

கடலின் நடுவில் நின்ற அசுரனைக் கொன்ற முருகனது குன்றத்தில் அடி வைத்து உயரச் சென்று ஒரு வேங்கை மரத்தடியில் தங்கி அன்று முதல் பதினான்காம் நாள் இந்திரன் முதலான தேவர்கள் துதிக்கத்தான் தன் கணவனாகிய கோவலனுடன் தேவ விமானத்தில் ஏறிச்சென்று பத்தினித் தெய்வமானாள்.

"அமரர்க் கரசன் தமர் வந்தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானவூர்தி ஏறினள் மாதோ

கானமர்புரி குழல் கண்ணகி தானென்"

என்று காப்பிய வரிகளும்