பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்றக்குரவைக் காதையில்

118



"தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம் மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
"பூப்பலி செய்ம்மின்காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவு மலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்

பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே"!

என்று காப்பியப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இது மலைவாழ் குறவர் பெருமக்களின் வழிபாட்டு முறையைக் குறிக்கிறது.

மலையின் கண்ணுள்ள புதுப்புனல்களில் நீராடிக் கண் சிவந்து ஒன்று கூடி முருகனைப் பாடி ஆடுவோம் என்று கூறி குன்றக்குரவைக்கூத்து ஆடுகின்றனர்.

இப்பாடல்கள் முருகனைப் பற்றிப் பலவாராகப் புகழ்ந்து பாடும் இனிய பாடல்களாகும்.

"உரையினி மாதராய் உண்கண் சிவப்பப்
புரைதீர் புனல் குடைந்தாடி னோமாயின்
உரவு நீர் மாகொன்றவேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழீ"

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கைவேலன்றே
பாரிரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொரு நாள்
சூரமாதடிந்த சுடரிலைய வெள்வேலே,

"அணி முகங்க ளோராறும் ஈராறுகையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகம் மேற்கொண்டவுணர் பீடழியும் வண்ணம்

மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே