பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்றக்குரவைக் காதையில்

120


வளர்ந்து கொண்டிருந்த மலையைச் சுற்றி வருகின்ற அசுரனுடைய மார்பைப் பிளக்கும் பொருட்டாக அந்தக் கிரவுஞ்ச மலையைப் பிளந்து வீழ்த்திய நீண்ட வேல் யாருடைய வேல் என்றால் சரவணப் பொய்கையில் மலர்ந்துள்ள தாமரை மலர்களாகிப் பள்ளியறையில் தன்னை பெற்றெடுத்த கார்த்திகை மகளிர் அறுவருடைய அழகிய முலைப்பால் உண்டருளிய முருகப் பெருமானுடைய அழகிய நெடுவேலே என்றும்.

முருகனுடைய வீரத்தையும் பெருமையையும் அவனுடைய வேலின் திறனையும் புகழந்து வேட்டுவ மகளிர் குன்றக் குரவைக் கூத்தாடி மகிழந்தனர்.

பின்னர், அந்த முருகக்கடவுள் காம நோய் தீர்க்க வருவார் என்று அம்முருகனை பல வேறாகப் பாராட்டி பக்திப் பரவசத்துடன் கூத்தாடிப்பாடுகிறார்கள். இப்பாடல்களும் தனிச்சிறப்பு மிக்கவைகளாக அமைந்துள்ளன.

"இறைவளை நல்லாய் இது நகையாகின்றே
கறிவளர்தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வரு கென்றான்

"ஆய்வளை நல்லாய் இது நகையாகின்றே
மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனிற்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்

"செறிவளைக் கைநல்லாய் இது நகையாகின்றே
வெறிகமழ்வெற்ப நோய் தீர்க்கவரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்

"நேறிழை நல்லாய் நகையாம் மலை நாடன்

மார்பு தரு வெந்நோய்தீர்க்க வரும் வேலன்