பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

121


தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன்

கார்க்கடப்பந்தாரெங்க கடவுள் வருமாயின்

என்றும் கூத்துப்பாடல்கள் வருகின்றன.

கடவுளைக் காதலனாக பாவித்துப் பக்தர்கள் இன்பச் சுவை நிரம்ப பக்திப்பாடல்கள் பாடுவது இந்து சமய மரமாகும். இங்கு வேட்டுவப்பெண்கள், தங்கள் மலை வாழ் மக்களின் கூத்து வடிவில், கடம்பமாலையணிந்த முருகன், கிரவுஞ்ச மலையைப் பிளந்த முருகன், ஆலமர் கடவுளின் குமரன் முருகன் தங்கள் தாபம் தணிக்க வருவான் என்று நெஞ்ருகிப்பாடி கூத்து ஆடுகின்றனர்.

அதன் பின்னர் வேலவர் நம்மை மணம் செய்ய வருவார் அவருடைய திருவடிகளை வணங்கி மகிழ்வோம் என்று பாடி மகிழ்ந்து ஆடுகிறார்கள்.

"வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப்பறவை மேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே

"கயிலை நன்மலையிறை மகனை நின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல் மணம் ஒழியருள் அவர் மணம் எனவே

"மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்
குல மலை உறைதரு குரவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள் நின் இணையடி தொழுதேம்.
பலரறி மணமவர் படுகுவ ரெனவே"

"குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும்

அறுமுக சொருவ நின் அடியினை தொழுதேம்