பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்றக்குரவைக் காதையில்

122


துறை மிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுக நன்மணம் விடு பிழைமண மெனவே!

என்று நாம் பாட மறைநின்று கேட்டருளி
மன்றலங்கண்ணி மலை நாடன் போவான்முன்,
சென்றேன் அவன்தன் திருவடிகை தொழுது
நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி

"கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர்
அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை
குறமகள் இல்லை செறிதோள் இல்லை
கடம்பூண்தெய்வமாக நேரார்
மடவர்மன்ற இச்சிறு குடியோரே"

என்று பாடுகிறார்கள், பாடி ஆடுகிறார்கள்.

வேல்முருகன் வந்து வெறியாடல் நிகழ்த்தும்போது அங்கு நீலமயில் மீது பள்ளியுடன் சேர்ந்து, ஆல் அமர் இறைவனான சிவபெருமானுடைய புதல்வன் வருவான். அவன் வந்தால் மூங்கில் புதர்களைக் கொண்ட மலை நாட்டைச் சேர்ந்த எங்கள் காதலன் எங்களை மணந்து கொள்ள அருளும்படி அவனைத் தொழுது வேண்டுவோமாக!

கயிலைமலை இறைவனின் புதல்வனே, உன்னுடைய திருவடிகளையும், உனக்குரிய பிறைமதி போன்ற வெற்றி யினையும் மயிலைப் போன்ற அழகிய சாயலையும், இளமையையும் உடைய வள்ளியம்மையின் திருவடிகளையும் வணங்குகிறோம். அயலார் மணத்தை ஒதுக்கிவிட்டு எனது அன்பிற்குரியவர் மணத்தையே எனக்கு அருளுக என்று அவனைத் தொழுது வேண்டுகிறோம், என்றும்.

மலைமகளான பார்வதி தேவியின் புதல்வனே, உன்னுடைய பிறை மதி போன்ற நெற்றியையும் இளமையும்