பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்கோட் காதையில்

128


சிவந்த சடையினையுடைய சிவபெருமானுடைய திருவருளினாலே வஞ்சி மாநகரம் விளங்குமாறு தோன்றிய சேர மன்னனே கேட்பாயாக எனக்கூறி

"மலயத் தேகுதும் வான் பேரிமய
நிலயத் தேடுதல் நின் கருத்தாகலின்
அருமறையந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல் நின் கடனென்று

ஆங்கவர் வாழ்த்தி .............. "

நீ இமயத்தை நோக்கிச் செல்லும் போது அந்த நாடுகளில் வாழும் அந்தணர்களைப் பேணுவது உனது கடமையாகும் என வாழத்தினர் என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

சேரமன்னன் தனது பெரும்படை கொண்டு தன்னை எதிர்த்த வடவரசரை முறியடித்து வெற்றி கண்ட போரினை திருமால் நடத்திய மூன்று போர்களுடன் ஒப்பிட்டு இளங்கோவடிகள் கூறுகிறார்கள்.

"கடல் வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ்
இலங்கையில் எழுந்த சமரமும் கடல்வண்ணன்
தேரூர் செருவும் பாடிப்பேரிசை

முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி"

என்று காப்பிய வரிகள் கூறுகின்றன.

திருமால் பாற்கடலைக் கலக்கியதும், இராமன், கடல் சூழ்ந்த இலங்கையில் வெற்றி கண்ட போரும், கண்ணன் தேரோட்டி வெற்றியு...ன் நடத்தி முடித்த பாரதப்போரும் சேர மன்னர் வடவரசர்களுக்கு எதிராக வெற்றி கண்ட போருக்கு இளங்கோவடிகள் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது சிறப்பாகும். இவ்வாறு வடபுலத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று அவ்வட திசையிலே மறையினைப் பாதுகாக்கும் அந்தணர்-