பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

129


களுடைய குண்டத்தின் தீயை அவியாது பேணிக்காக்கும்படி தூதுவரிடம் சொல்லியனுப்பி இமயத்தின் கண், ஒப்பற்ற பத்தினிக்கடவுளுக்குக் கல்கொண்டான் சேரமன்னன் என்று காப்பியம் தெளிவுபடுத்திக் கூறுகிறது.

"வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புனர்
தடவுத் தீ அவியாத்தண்பெருவாழ்க்கை
காற்றூதாளரைப் போற்றிக் காமினென
வல்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வோற்றானைப் படை பல ஏவிப்
பொற்கோட்டிமயத்துப் பொருவறு பத்தினிக்

கற்கால் கொண்டனன் காவலனாங்கென்"

என்று கால் கோட் காதையின் காப்பிய வரிகள் முடிகின்றன.

பொதுவாக ஒரு அரசனின் படைகள் அடுத்த நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது வழியில் உள்ள ஊர்களுக்கும் மக்களுக்கும், ஆநிறைகளுக்கும், அந்தணர்களின் வேள்விகளுக்கும் கொல்லர்களின் உலைக்களன்களுக்கும், வயல் வெளிகளில் உள்ள பயிர்களுக்கும் தோட்டங்களுக்கும் சேதம் ஏற்பட்டுவிடும். ஆனால் அறவழியில் ஆட்சி நடத்தும் பேரரசர்கள், ஒரு லட்சிய நோக்கோடு படைகளைக் கொண்டு செல்லும்போது, அப்படிப்பட்ட சேதங்கள் ஏற்படாமல், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துச் செல்லவேண்டும் என்பது அரச நீதியிலும் போர் நீதியிலும் உள்ள நெறி முயைாகும்.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனது இராமாயணத்தில் இலங்கையை நோக்கி வானரப்படை புறப்பட்டுச் செல்வதைப் பற்றிக் குறிப்பிடும்போது "வழியில் வந்த நகரங்களுக்காவது கிராமங்களுக்காவது எந்த விதச் சேதமும் செய்யாமால் செல்ல வேண்டுமென்பது ராமனுடைய கண்டிப்பான உத்தரவு" என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

கம்பனும் தனது இராமாயண காவியத்தில் வானரப் படைகள் செல்வது பற்றிக் குறிப்பிடுகையில்