பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. நீர்ப்படைக்காதையில்

சேரமன்னன் வடபுல மன்னர்களான கனக விஜயர்களை, அவர்கள் தமிழையும் தமிழ் மன்னர்களையும் பழித்தார்கள் என்ற காரணத்தால், எதிர்த்துப் போரிட்டு வென்று அவர்களது தலையில் கண்ணகி சிலைக்கான கல்லைச் சுமக்க வைத்து, கொண்டு வந்தான் என்று சிலப்பிதிகாரக் கதை கூறுகிறது.

முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நடைபெற்ற சூரசம்காரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடைபெற்றன. இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் பதினெட்டு மாதங்கள் நடைபெற்றது. பாண்டவர்களுக்கு கெளரவர்களுக்கும் குரு பூமியில் பதினெட்டு நாட்கள் போர் நடைபெற்றது. சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயர்களுக்கும் நடந்த போர் பதினெட்டு நாழிகையில் முடிந்ததாகவும் காப்பியத்தின் நிர்ப்படைக் காதையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சேர மன்னன் பதினெட்டு நாளிகையில் வடபுல மன்னர்களை வென்றான் என அவனுடைய விரத்தின் சிறப்பை சிலப்பதிகார காப்பியம் விவரித்துக் கூறுகிறது.

“உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்றிரட்டியென்று
ஆண்டும் மதியும் நாளும் கடிகையும்

ஈண்டு நீர் ஞாலங்கூட்டி யெண்கொள”

என்று சிலப்பதிகாரக் காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

போர் முடித்து இமயத்தில் கல் எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது சேரமன்னன் கங்கையாற்றின் தென்கரையில் தங்கி கல்லிற்கு கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது பற்றியும் சிலப்பதிகார காப்பியத்தில் செய்தி வருகிறது. சேரப்பேரசன் அவ்வாறு கங்கையாற்றின் தென்கரையில் தங்கிருந்த போது மாடலன் என்னும் அந்தணன், சேரனிடத்திற்கு வந்து “கோவலன் - கண்ணகி ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தும் அவர்களைக் காப்பாற்ற முடியாமைக்கு வருந்திமாதரி உயிர்விட்டாள்” என்றும்,