பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

135


அது கேட்டச் சேரன் செங்குட்டுவன் கோபம் கொண்டான். அப்போது அங்கு நீலன் ஆகியோருடன் வந்திருந்த மாடல மறையோன் சேர மன்னனிடம் சினம் தணிய பல நல்ல அறநெறிகளைக் கூறுகிறான். இவை பற்றி இக்காதையில் இளங்கோவடிகள் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். மாடல மறையோன் வாயிலாகக் கூறப்படும் அறிவுரைகள் பல அறிய கருத்துகளைக் கொண்டதாகும். இவை அரசனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அவசியமான நெறிமுறைகளாகும் யாராயினும் இந்த அறநெறிகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது நமக்கு இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது.

மன்னனுடைய சீற்றம் தணியப் பலவாறாக அவனைப் புகழந்து கூறி மாடல மறையோன் தனது கருத்துக்களைத் தொடர்ந்து கூறுகிறான்.

மாமன்னனே, நீ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்திப்புகழ் பெற்றாய். இன்னும் மறக்கள வேள்வியைச் செய்ய வேண்டுமென்று சிந்திக்காதே. போரைத்தவிர்த்து அறக்கள வேள்வியைத் தொடங்குவாயாக என்று மாடல மறையோன் தொடங்கினான்.

“வையம் காவல் பூண்ட நின்நல்யாண்டு
ஐயைந்திரட்டி சென்றதற்பின்னும்
அறக்களவேள்வி செய்யாதியாங்கணும்

மறக்களவேள்வி செய்வோயாயினை”

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன

எத்தனை அருள் உடையோராயினும் பொருளுடையோராயினும், வல்லமை மிக்கோராயினும் செல்வம் மிக்கோராயினும் படைபலம் மிக்கோராயினும், யாக்கை நிலை யற்றது. தனது வாழ்நாளில் யாரும் ஒரு நல்ல காரியத்தை எடுத்து அதைக் காலத்தே செய்து முடிக்க வேண்டும் என்னும் சிறந்த கருத்துக்கள் மிகவும் சிறப்பாகச் சிறந்த எடுத்துக்காட்டுகளுடனும் மேற்கோள்-